பெரியார் – ஒரு தகவல் பெட்டகம்

பெரியார் வரலாறு

  • பிறப்பு:செப்டம்பர் 17,1879
  • பெற்றோர்:வெங்கடப்ப நாயக்கர் -சின்னத்தாயி
  • ஊர்:ஈரோடு
  • பெரியாரின் தாய்மொழி கன்னடம் ஆகும்.இவர் தமிழ் தெலுங்கு கன்னடம் ஆகிய மூன்று திராவிட மொழிகளைப் பேசும் ஆற்றல் பெற்றவர்.
  • தனது 19-வது வயதில் நாகம்மையை மணந்தார்.

அரசியல் வாழ்வு:

  • 1918ல் ஈரோடு நகரசபைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • 1919ஆம் ஆண்டு காங்கிரஸில் இணைந்தார்.
  • 1920 இல் ஒத்துழையாமை இயக்கத்தில் ஈடுபட்டார்.
  • 1921 ல் ஈரோட்டில் நடைபெற்ற கள்ளுக்கடை மறியலில் ஈடுபட்டார்.
  • 1922 – 23 ம் ஆண்டு சென்னை மாகாண காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • 1924 ம் ஆண்டு கேரள மாநிலத்தில் வைக்கம் என்ற ஊரில் ஆலய நுழைவு போராட்டம் நடத்தி வெற்றி பெற்றார்.
  • ஆதலால் வைக்கம் வீரர் என பாராட்டப்பட்டார்.
  • இவரை வைக்கம் என்ற ஊருக்கு அழைத்துச் சென்றவர் ஜார்ஜ் ஜோசப் ஆவார்.
  • ஜார்ஜ் ஜோசப் ரோசாப்பூ துரை என மதுரை மக்களால் அன்போடு அழைக்கப்படுகிறார்.
  • 1925 ம்ஆண்டு வா வே சு ஐயரின் சேரன்மாதேவி குருகுலத்தில் நிலவிய வருணாசிரம நடவடிக்கைகளை பெரியார் எதிர்த்தார்.
  • 1925 ல் காஞ்சிபுரத்தில் திரு வி கல்யாண சுந்தரனார் தலைமையில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் பெரியார் கொண்டுவந்த வகுப்புவாரி பிரதிநிதித்துவ கொள்கையை காங்கிரஸ் ஏற்க மறுத்ததால், பெரியார் காங்கிரசிலிருந்து விலகினார்.
  • 1925 ம் ஆண்டு சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கினார்.
  • 1929 ல் சுயமரியாதை இயக்கத்தின் முதல் மாநாடு செங்கல்பட்டில் நடைபெற்றது.
  • 1930 ஜனவரியில் குடும்பக்கட்டுப்பாடு பற்றிய புத்தகத்தை வெளியிட்டார்.
  • தேவதாசி ஒழிப்பு மசோதாவை நிறைவேற்றுவதில் முக்கிய கருவியாக செயல்பட்டார்.
  • இந்த மசோதா அக்டோபர் 9,1947 சட்டமாக நிறைவேற்றப்பட்டது.
  • 1937 இந்தி எதிர்ப்புப் போராட்டம் மேலும் 1948,1952,1965 ஆகிய ஆண்டுகளிலும் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை நடத்தினார்.
  • 1938 ல் மறைமலையடிகளின் மகள் நீலாம்பிகை அம்மையார் தலைமையில் நடைபெற்ற மகளிர் மாநாட்டில் ஈ வெ ரா வுக்கு பெரியார் என்ற பட்டம் வழங்கப்பட்டது.
  • இப்பட்டத்தை வழங்கியவர் டாக்டர் தர்மாம்பாள்.
  • 1938 ல் நீதிக் கட்சியின் தலைவரானார்.
  • 1939 ல் திராவிடநாடு கோரிக்கையை எழுப்பினார்.
  • 1944 – ம்ஆண்டு அண்ணாதுரையின் தீர்மானத்தின்படி நீதிக்கட்சியின் பெயரைத் திராவிடர் கழகம் என மாற்றம் செய்யப்பட்டது.
  • 70 வயதான பெரியார் 28 வயதுடைய மணியம்மையை திருமணம் செய்து கொண்டார்.
  • 1953 – ராஜாஜி கொண்டு வந்த குலக்கல்வித் திட்டத்திற்கு எதிர்ப்பு.
  • 1970 – யுனெஸ்கோ விருது பெற்றார்.
  • 1973 – மத்திய அரசு இவரை பாராட்டி அஞ்சல் தலை ஒன்றை வெளியிட்டது.
  • 1973 ம்ஆண்டு டிசம்பர் 24ஆம் நாள் தனது 94வது வயதில் இயற்கை எய்தினார்.
  • பி ஆர் அம்பேத்கர் எழுதிய ஜாதி ஒழிப்பு எனும் நூலை அந்த நூல் வெளிவந்தவுடன் 1936 ல் தமிழில் பதிப்பித்தார்.
  • இந்தி எதிர்ப்பு போராட்டம் ஆனது (1937 – 39) தமிழ்நாடு அரசியலில் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
  • இந்தப் போராட்டத்துக்காக பெரியார் சிறையில் அடைக்கப்பட்டார்.

பெரியார் – பெண் உரிமையில் பங்கு

  • பெரியார் ஆணாதிக்க சமூகத்தை விமர்சித்தார்.
  • குழந்தை திருமணத்தையும் தேவதாசி முறையும் கண்டனம் செய்தார்.
  • பெண்களுக்கு விவாகரத்து பெறுவதற்கு சொத்தில் பங்கு பெறுவதற்கும் உரிமை உண்டு என ஆணித்தரமாக வலியுறுத்தினார்.
  • பெண்ணியம் குறித்து பெரியார் எழுதிய மிக முக்கியமான நூல் – பெண் ஏன் அடிமையானாள்?
  • சொத்துக்கள் பாதுகாவலர்களாக இருத்தல் மற்றும் தத்தெடுத்தல் ஆகியவற்றில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் சம உரிமை வேண்டும் என்றார்.
  • குடும்பக் கட்டுப்பாடு கருத்தடை ஆகியவற்றை வலுவாக ஆதரித்தவர்
  • 1989 ம் ஆண்டு தமிழ்நாடு இந்து வாரிசுரிமை சீர்திருத்த சட்டத்தை அறிமுகம் செய்தது.
  • அச்சட்டம் முன்னோர்களின் சொத்துகளை உடைமையாக பெறுவதில் பெண்களுக்கு சம உரிமை உண்டு என்பதை உறுதிப்படுத்தியது.
  • ‘திருமணம் செய்து கொடுப்பது’ என்ற வார்த்தைகளை மறுத்த அவர் அதற்கு பதிலாக திருக்குறளில் இருந்து எடுக்கப்பட்ட வாழ்க்கைத்துணை என்ற வார்த்தையை பயன்படுத்த வேண்டினார்.

சமயம் குறித்து பெரியார்:

  • பெரியார் நாத்திக வாதத்தை (கடவுள் மறுப்பு) முன் வைத்தார்.
  • சமயம் என்றால் நீங்கள் மூடநம்பிக்கைகளை ஏற்றுக் கொள்கிறீர்கள் என்று பொருள் என உறுதிபடக் கூறினார்.
  • கோவில்களில் நிலவிய பரம்பரை அர்ச்சகர்கள் முறையை அவர் எதிர்த்தார்.
  • பிராமண அர்ச்சகர்கள் வேத சடங்குகளையும் புறக்கணிக்க மக்களை ஊக்குவித்தார்.
  • சடங்குகள் அற்ற சாதி மறுப்பு சுயமரியாதை திருமணங்களை பரிந்துரை செய்தார்.
  • முறையான சமய அறிவை பெற்றுள்ள தகுதி உடைய தனிநபர்களும் அர்ச்சகராகலாம் என்று வாதிட்டார்.

பத்திரிக்கைகள்:

  • குடியரசு (1925) – சுயமரியாதை இயக்கத்தின் அதிகாரப்பூர்வ செய்தித்தாள்.
  • ரிவோல்ட் (1928) – ஆங்கில இதழ்
  • புரட்சி (1933)
  • பகுத்தறிவு (1934) – இவ்விதழின் மூலம் தமிழ் மொழி எழுத்து சீர்திருத்தம் கொண்டு வந்தார்,ரோமானிய எண் முறையை பயன்படுத்தினார்.
  • விடுதலை (1935)
  • திராவிடன் (நீதிக்கட்சியின் நாளிதழில் சித்திரபுத்திரன் என்ற புனைப்பெயரில் கட்டுரை எழுதி வந்தார்)
  • உண்மை (1970)

சிறப்பு பெயர்கள்

  • சிறைப்பறவை
  • வைக்கம் வீரர்
  • பகுத்தறிவு பகலவன்
  • தமிழ்நாட்டு ரூசோ
  • யுனெஸ்கோவால் பாராட்டப்பட்ட சிறப்பு பெயர்கள்
  • புத்துலக தொலைநோக்காளர்
  • தென்னிந்தியாவின் சாக்ரடீஸ்

3 thoughts on “பெரியார் – ஒரு தகவல் பெட்டகம்”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!