| வ.எண் | தமனி | சிரை |
| 1 | வழங்கும் குழாய்கள் | பெறும் குழாய்கள் |
| 2 | இளஞ்சிவப்பு நிறத்தினை உடையது | சிவப்பு நிறத்தினை உடையது. |
| 3 | உடலின் ஆழ்பகுதியில் அமைந்துள்ளது | உடலின் மேற்பகுதியில் அமைந்துள்ளது. |
| 4 | அதிக அழுத்தத்துடன் கூடிய இரத்த ஓட்டம் | குறைந்த அழுத்தத்துடன் கூடிய இரத்த ஓட்டம் |
| 5 | தமனியின் சுவர்கள் வலிமையான தடித்த மீளும் தன்மை உடையவை | சிரையின் சுவர்கள் வலிமை குறைந்த, மிருதுவான மீள்தன்மை அற்றவை |
| 6 | நுரையீரல் தமனியை தவிர மற்ற அனைத்து தமனிகளும் ஆக்சிஜன் மிகுந்த இரத்தத்தினை எடுத்து செல்கின்றன. | நுரையீரல் சிரையினை தவிர மற்ற அனைத்து சிரைகளும் ஆக்சிஜன் குறைந்த இரத்தத்தினை எடுத்து செல்கின்றன. |
| 7 | உள்ளீடு வால்வுகள் கிடையாது. | உள்ளீடு வால்வுகள் உண்டு. |