இந்தியாவில் செயல்படுத்தப்படும் கல்வித் திட்டங்கள் பற்றி விரிவாக எழுதுக

இந்தியாவில் செயல்படுத்தப்படும் கல்வித் திட்டங்கள்:

சர்வ சிக்ஷா அபியான்:

 • அனைவருக்கும் தொடக்கக் கல்வி வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
 • இது கல்வி உரிமைச்சட்டம் (RTE) 2009ல் குறிப்பிடப்பட்டுள்ள விதிமுறைகளுக்கு ஏற்ப செயல்படுகிறது. RTE 2009ல் கூறப்பட்டுள்ள படி, இலவசக் கல்வி வழங்குகிறது.

ராஷ்ட்ரிய மத்யமிக் சிக்ஷா அபியான் (தேசிய இடைநிலைக் கல்வித்திட்டம்)

 • அனைவருக்கும் உயர்நிலைக் கல்வி என்பதை இத்திட்டம் நோக்கமாக கொண்டுள்ளது.
 • குறைந்தபட்ச கல்வியின் அளவை எட்டாம் வகுப்பில் இருந்து பத்தாம் வகுப்பிற்கு உயர்த்துதல்.
 • அறிவியல், கணிதம் (ம) ஆங்கிலம் ஆகியவற்றில் கவனம் செலுத்தி, நல்ல தரமான இடைநிலைக் கல்வியை வழங்குதல்.
 • பாலினம், சமூக பொருளாதார வேறுபாடு, உடல் ஊனம் (ம) இதரபிற காரணங்களால் எந்த குழந்தையும் உயர்நிலைப் படிப்பை தவறவிட்டுவிடாமல் செய்தல்.

அடல் டிங்கரிங் ஆய்வகம்:

 • இளம் குழந்தைகளுக்கு (முறை சார்ந்த கல்வி கிடைக்காத குழந்தைகளுக்கும்) STEM (அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் (ம) கணிதம்) பற்றி அறிவினைப் பெற அடல் டிங்கரிங் ஆய்வகக் கல்விக் கருவிகள் உதவுகின்றன.
 • இது நிதி ஆயோக்கின் அடல் புதுமை இயக்கத்தின் ஒரு பகுதியாகும்.

உன்னத் பாரத் அபியான்:

 • இந்தியாவின் கிராமப்புறங்களுக்கு உயர்கல்வி நிறுவனங்களை இணைப்பதற்காக இத்திட்டம் தொடங்கப்பட்டது.
 • கிராம சமுதாயங்களின் நிலையான வளர்ச்சியை விரைவுபடுத்த,
 • முன்னேற்றத்திற்கான சவால்களை கண்டு, அதற்குப் அடையாளம் பொருத்தமான தீர்வு காண உயர்கல்வி நிறுவனங்கள் கிராமப்புற மக்களோடு இணைந்து உழைக்க வேண்டும் என்பதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.

விஷ்வஜித் திட்டம்:

 • உலகளாவிய உயர்கல்வி பல்கலைக்கழகங்களின் தரவரிசையில் உயர்ந்த தரவரிசையினைப் பெறுவதற்கு முன்னணி இந்திய தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு (IIT) உதவுவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.
 • இத்திட்டத்தின் கீழ் ஐந்து ஆண்டிற்குள் இந்தியாவில் முதன்மை பெற்ற ஏழு IIT கள் ஒவ்வொன்றிற்கும் ரூ.1250 கோடி நிதி உதவி வழங்குதல்.
 • இதன் மூலம் IIT களில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் (ம) வெளிநாட்டு ஆசிரியர்களை பணியமர்த்துதல் போன்றவற்றை மேற்கொள்ள இயலும்.

உடான் (பெண் மாணவர்களுக்கு கல்விச் சிறகை அளித்தல்):

 • தொழில் நுட்பக் கல்வி நிறுவனங்கள், ஐஐடி (ம) பொறியியல் கல்லூரிகள் போன்றவற்றில் பெண்களின் குறைந்த அளவிலான சேர்க்கை நிலையைப் போக்க முயலுதல்,
 • இந்தத் திட்டத்தின் கீழ், நாட்டில் பல்வேறு முதன்மை பொறியியல் கல்லூரிகளின் சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வுக்கு தயாராவதற்காக மாணவர்களுக்கு 11 மற்றும் 12ம் வகுப்புகளில் தேவையான உதவிகளைச் செய்தல்.

ஸ்வயம் (இனம் விருப்பார்வ மனதினருக்கான செயலூக்கமுள்ள கற்றலுக்கான கல்வி வலைத்தளங்கள்)

 • ஆன்லைன் பாடமுறைகளுக்கான ஒருங்கிணைந்த தளத்தையும், வலைவாசலையும்,தகவல் (ம) தொடர்புத் தொழில்நுட்பத்தையும் பயன்படுத்தி, அனைத்து உயர் கல்விப் பாடங்களையும் திறன் துறைப் பாடமுறைகளையும் உள்ளடக்கி அளிக்கும்.

ஸ்வயம் பிரபா:

 • GSAT – ளை செயற்கைக் கோளைப் பயன்படுத்தி 24 x 7 என்ற அளவில் உயரகர கல்வியின் திட்டத்தை ஒளிபரப்புவதற்காக ஏற்படுத்தப்பட்ட 32 DTH சேனல்களின் தொகுப்பே ஸ்வயம் பிரபா.

தேசிய டிஜிட்டல் நூலகம்:

 • மனிதவள அமைச்சகத்தின் திட்டமான இது, ஒரு ஒற்றைச் சாளரத் தேடும் வசதியுடன் கூடிய ஒரு மெய்நிகர் கற்கைவளக் களஞ்சியம் ஆகும்.

ஷாலா சித்தி (பள்ளி ஆய்வுத்திட்டம்);

 • புள்ளிகளைத் திறனாய்வு செய்து பள்ளிமேம்பாடு (ம) வளர்ச்சிக்கான ஒருங்கிணைந்த திட்டம்

ஷாலா தர்பன்:

 • இது ஒரு தகவல் தொழில்நுட்பத் திட்டமாகும்.
 • பள்ளியில் டடிக்கும் மாணவர்களை அவர்களது பெற்றோர்கள் கண்காணிக்க இத்திட்டத்தில் வகை செய்யப்பட்டுள்ளது.

சமீப் (மாணவர்கள் (ம) வெளியுறவுத் துறை அமைச்சகத்திற்குமான கூட்டணைவுத் திட்டம்):

 • இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைகளையும், அதன் உலகளாவிய வெளியுறவு ஈடுபாட்டையும் நாடு முழுவதும் உள்ள மாணவர்களிடையே கொண்டு செல்வதை நோக்கமாக கொண்டுள்ளது.

வித்யாஞ்சலி யோஜனா:

 • அரசுப் பள்ளிகளில் கல்வியுடன் கூடிய பிற நடவடிக்கைகளை வலுப்படுத்த பல்வேறு துறைகளைச் சேர்ந்த தன்னார்வலர்களை ஈடுபடுத்துதல்.

கஸ்தூரிபா காந்தி பாலிகா வித்யாலயா:

 • கல்வி ரீதியாக பின்தங்கிய பகுதியில் உள்ள பெண்களுக்கு உண்டு உறைவிடப் பள்ளி மூலம் மேல்நிலைக் கல்வி வழங்குதல்.

ஆபரேஷன் டிஜிட்டல் போர்டு:

 • அனைத்து பள்ளிகளிலும் சிறந்த டிஜிட்டல் கல்வியை வழங்குதல். பிரதமரின் ஆராய்ச்சி மாணவர்களுக்கான உதவித்தொகை

 

error: Content is protected !!
Open chat
Hello Exam Machine Team. I Would Like To Join TNPSC Group 2 Mains Test Batch.