இந்திய கூட்டாட்சியில் நிதி அதிகாரப் பகிர்வு எவ்வாறு வழங்கப்பட்டுள்ளது என்பதை கண்டறிக.  

நிதி அதிகாரப் பகிர்வு

 • கூட்டாட்சி ஆட்சிமுறையின் வெற்றிக்கு நிதி அதிகாரப் பகிர்வு மிகவும் முக்கியமானதாகும். 
 • இந்திய அரசமைப்பு மத்திய மாநில அரசாங்கங்கள் இடையே நிதி அதிகாரப் பகிர்வை விரிவாக வழங்குகின்றது. 
 • இப்ப ஹீரோவானது இந்திய அரசாங்க சட்டம் 1935-யை பெரிய அளவில் பிரதிபலிக்கிறது. 
 • இரண்டு வகையான வருமானங்கள் நிதிப் பகிர்வில் காணப்படுகின்றன.
 1. வரி வருமான பகிர்வு
 2. இதர வருமானம் பகிர்வு

 வரி வருமான பகிர்வு

 • மத்திய மாநில நிதிப் பகிர்வில் வரி வருமான பகிர்வு ஐந்து வகைகளை தீர்மானிக்கப்பட்டுள்ளது.
 1. சுங்கவரி போன்றவைகள் முற்றிலும் மத்திய அரசாங்கத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளன.
 2. விற்பனை வரி போன்ற வரிகள் முற்றிலும் மாநில அரசாங்கத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளன.
 3. சில வரிகளை மத்திய அரசாங்கம் விதிக்கின்றது. மாநில அரசாங்கங்கள் அவ்வரிகளை வசூலித்து பயன்படுத்திக்கொள்கின்றன (எடுத்துக்காட்டு) முத்திரை வரி, கலால் வரி எனக்கூறலாம்.
 4. சில வரிகளை மத்திய அரசாங்கம் விதித்து வசூலிக்கிறது. ஆனால் அந்த வருமானம் மாநிலங்களுக்கு வழங்கப்படுகின்றன. எடுத்துக்காட்டாக செய்தித்தாள்களில் வரும் விளம்பரங்கள் மீதான வரி.
 5. சில வரிகள் மத்திய அரசால் விதிக்கப்பட்டு வசூலிக்கப்பட்ட மாநிலங்களிடையே பகிர்ந்து அளிக்கப் படுகின்றன. எடுத்துக்காட்டாக விவசாய வருமானம் தவிர்த்த பிற வருமானங்கள் மீதான வரி.

 இதர வருமான பகிர்வு

 • வரி தவிர இதர வருமானம் வழிகளில் மத்திய மாநிலங்களுக்கு அரசமைப்பில் வழங்கப்பட்டுள்ளன. 
 • மத்திய அரசாங்கம் தனக்கான வணிக மற்றும் தொழில் நிறுவனங்களை நடத்தி வருமானத்தை ஈட்டலாம்.
 • எடுத்துக்காட்டாக தொழில் நீதி நிறுவனம். ரயில்வே துறை, ஒளிபரப்பு, அஞ்சல்துறை 
 • மாநில அரசாங்கங்கள் தங்களுக்கென ஒதுக்கப்பட்ட வணிக ,தொழில் நிறுவனங்கள் மூலமாக வருமானத்தை ஈட்டிக் கொள்ளலாம். 
 • .மின்சாரம், நீர்ப்பாசனம் ,வனங்கள், தரைவழிப் போக்குவரத்து போன்ற துறைகளில் மாநில அரசாங்கங்கள் வருமானத்தை ஈட்டலாம்.

 

error: Content is protected !!
Open chat
Hello Exam Machine Team. I Would Like To Join TNPSC Group 2 Mains Test Batch.