நானோ அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் (IINST) பற்றி நீங்கள் அறிந்தது என்ன?

நானோ அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் (IINST):

  • இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் தன்னாட்சி நிறுவனமான நானோ அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் (INST), ஆராய்ச்சி (ம) மேம்பாட்டை அதிகரிப்பதற்காக டிஎஸ்டியால் தொடங்கப்பட்ட நானோ திட்ட குடையின் கீழ் நிறுவப்பட்டுள்ளது.
  • இது பஞ்சாப்பில், மொஹாலியில் அமைந்துள்ளது. 
  • INST ஆனது உயிரியலாளர்கள், வேதியியலாளர்கள், இயற்பியலாளர்கள் மற்றும் விஞ்ஞானிகளை நானோ அறிவியல் (ம) தொழில்நுட்பத்தில் ஆர்வமுள்ள பொறியாளர்களை ஒருங்கிணைக்கிறது.
  • ஐ.என்.எஸ்.டி. விஞ்ஞானிகள், அடிப்படை அறிவியல் அறிவு கொண்டவர்களாகவும், வெவ்வேறு பின்னனியிலிருந்து வந்தவர்களாகவும் உள்ளனர், 
  • இவர்கள் தங்கள் தனிப்பட்ட அறிவியல் ஆராய்ச்சி மேற்கொள்வதைத் தவிர்த்து, ஒரு பொதுவான மேடையின் கீழ், ஒரு இணக்கமான பணிச்சூழலில் ஒன்றிணைந்து செயல்படுகின்றனர்.
  • வேளாண்மை, பாதுகாப்பு, சுகாதாரம், எரிசக்தி, சுற்றுச்சூழல் மற்றும் நீர் போன்ற துறைகளில் தேசிய முன்னுரிமைகளை நோக்கிய செயல்முறைகள், தொழில்நுட்பங்கள் (ம) சாதனங்களை உருவாக்குவதே இதன் நோக்கமாகும்.
  • ஐ.என்.எஸ்.டி. சிறந்த ஆராய்ச்சியை ஊக்குவிக்கிறது, உள்நாட்டு உற்பத்திக்கான பொருட்கள், சாதனங்களை உருவாக்குதல், மற்றும் மேம்பட்ட பாதுகாப்பு, வணிக தொழில்நுட்பத்திற்கான மூலோபய செயல்முறைகளை உருவாக்குகிறது.
  • சுகாதாரத் துறையில் குறிப்பாக சமூகத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு குறைந்த விலையில் மருந்துப் பொருட்களை உருவாக்குகிறது,
  • ஐ.என்.எஸ்.டி. அறிவியலை ஊக்குவிக்கிறது மற்றும் நாட்டின் இளம் தலைமுறையினரிடையே இந்தியாவின் தொழில்நுட்பத்தை வளர்ப்பதற்கான அதன் சேவைகளை பரவலாக்கும் திட்டமாகும்.
  • ஐ.என்.எஸ்.டி. அதன் பல்வேறு செயல்பாடுகளின் மூலம் தேசிய சமூக திட்டங்களான அபியான், ஸ்வஸ்த் பாரதி, திறன் நகரங்கள், ஸ்மார்ட் கிராமங்கள், மேக் இன் இந்தியா போன்றவற்றை நிறைவேற்ற, இந்த திட்டத்தின் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி புதுப்பிக்கதக்க எரிசக்தி வளங்களை வழங்க உறுதி அளித்துள்ளது.
error: Content is protected !!
Open chat
Hello Exam Machine Team. I Would Like To Join TNPSC Group 2 Mains Test Batch.