லேசர்
- லேசர் என்பது (Light Amplification by Stimulated Emission of Radiation) என்ற ஆங்கிலச் சொற்றொடரின் சுருக்கமாகும்.
- சாதாரண ஒளிமூலம் வெளிவிடும் ஒளி ஓரியல்பற்றது, ஏனெனில் வெவ்வேறு அணுக்கள் வெவ்வேறு கட்டங்களில் ஒளியை உமிழும்.
- குறுக்கீட்டு விளைவிற்கு ஓரியல் மூலங்கள் மிக அவசியம். இரண்டு தனிப்பட்ட மூலங்கள் ஓரியல் மூலங்களாகச் செயல்படாது.
- சோதனைகளுக்கு ஒரு ஒளி மூலத்திலிருந்து இரண்டு ஒரியல் மூலங்களைப் பெறலாம்.
- சமீபகாலமாக முழுமையான ஓரியல் பண்பினைக் கொண்ட மூலங்கள் உண்டாக்கப்பட்டன. இவையே லேசர் எனப்படும்.
லேசரின் சிறப்பியல்புகள்
- லேசர் கற்றை என்பது ஒற்றை நிற ஒளியைக் கொண்டது ஓரியல்பு தன்மையுடையது. எல்லா அலைகளும் ஒரே கட்டத்தில் இருக்கும்.
- விரிந்து செல்லாது
- அதிகச் செறிவு கொண்டது.
லேசரின் பயன்கள்
- உயர்ந்த ஓரயில் பண்பு, அதிகச் செறிவு காரணமாக லேசர் கற்றையானது அறிவியல் மற்றும் பொறியியல் துறைகளில் பயன்படுகிறது.
தொழில்துறை பயன்கள்
- லேசர் கற்றையினைப் பயன்படுத்தி வைரம் மற்றும் கடினமான, தடித்த தகடு போன்றவற்றில் மிக நுண்ணிய துளைகளிடலாம்.
- கடினமான உலோகங்களின் தடித்த தகடுகளை வெட்டவும், பற்ற வைப்பதற்கும் பயன்படுகின்றன.
- மின்னணு சுற்றுகளிலும், குறைக்கடத்தி சுற்றுகளிலும் தேவையற்ற பொருள்களை ஆவியாக்கப் பயன்படுகறிது.
- பொருள்களின் தரத்தினை சோதிக்க உதவும்.
மருத்துவப் பயன்கள்
- மிகக் குறுகிய பரப்பில் குவிக்கப்படுவதால், மிக நுண்ணிய அறுவை சிகிச்சைக்குப் பயன்படுகிறது.
- சிறுநீரகக் கல், கட்டிகள் ஆகியவற்றை அகற்றவும், மூளை அறுவை சிகிச்சை, கண் விழித்திரை நீ க்குதல் போன்றவற்றில் நுண்ணிய இரத்தக் குழாய்களை வெட்டவும், ஒட்டவும் பயன்படுகிறது.
- .உணவுப்பாதை உள்நோக்கிகளில் (endoscopy) பயன்படுகிறது.
- மனித மற்றும் மிருகப் புற்றுநோய் சிகிச்சையில் பயன்படுகிறது.