இந்தியாவில் தொடங்கப்பட்டுள்ள வறுமை ஒழிப்புத் திட்டங்கள் ஏதேனும் நான்கை குறிப்பிட்டு எழுதுக

வறுமை ஒழிப்புத் திட்டங்கள் (Poverty Alleviation Programme)

  • குறைந்த நிலை வேலைவாய்ப்பின் உற்பத்தி திறனை அதிகரிப்பதும், வேலைவாய்ப்பை அளிப்பதும் வறுமை ஒழிப்பு திட்டத்தின் முக்கிய பிரச்சனையாகும்.

நிலச் சீர்திருத்தங்கள்

  • மாநில அரசுகள் நிலசீர்திருத்த சட்டங்களை இயற்றுவதன் மூலமாக நிலமற்ற விவசாயிகளின் பொருளாதார நிலைமைகளை மேம்படச் செய்ய வழிவகுத்தன.
  • (உ.ம்) ஜமின்தார் முறை ஒழிக்கப்பட்டதினால், சுரண்டல் முறைகள் சமுதாயத்தை விட்டு நீக்கப்பட்டன.
  • பல மாநிலங்களில் குத்தகை சட்டங்கள் இயற்றப்பட்டன.
  • இதன் மூலம் குத்தகைகாரர்களின் நலன்கள் பாதுகாக்கப்பட்டன.
  • இச்சட்டத்தின் வாயிலாக பெறப்பட்ட உபரி நிலங்களை நிலமற்றோருக்கும், சிறுவிவசாயிகளுக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டது.

ஜவகர் கிராம வேலைவாய்ப்பு திட்டம் (Jawahar Grama Sannidhi Yojana – JGSY)

  • இத்திட்டம் 1999ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.
  • இத்திட்டத்திற்காகும் செலவினை மத்திய மற்றும் மாநிலங்களைக்கிடையே 75 : 25 என்ற முறையில் பிரித்துக் கொள்ளப்பட்டது.

தேசிய சமூக உதவித் திட்டம் (National Social Assistance Programme – NSAP)

  • இத்திட்டம் 1995-ம் ஆண்டு துவங்கப்பட்டது.
  • நூறு சதவீதம் இத்திட்டத்தை மைய அரசே ஏற்று நடத்தும்.
  • இத்திட்டத்தின் மூலமாக ஏழைக் குடும்பத்தினர், வயது முதிர்ந்தோர், வருமானம் ஈட்டும் குடும்பத் தலைவனை இழந்த குடும்பத்தினர் மற்றும் மகப்பேறு கால உதவி பெறுவோர், அதிக நலன்கள் பெறுவர்.

வேலைவாய்ப்பு உறுதித்திட்டம் (Employment Assurance Scheme-EAS)

  • இத்திட்டம் 1993, நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது.
  • நாட்டிலுள்ள வளர்ச்சியால் பாதிக்கப்பட்ட பழங்குடியிருப்புகள் மற்றும் மலைப் பகுதிகளாகிய பிற்பட்ட தொகுப்புக்களில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது.
  • இத்திட்டமானது விரிவாக்கப்பட்டு 5488 கிராமப்புற தொகுப்புகள் பயனடைந்தனர். வேலையில்லா கிராமப்புற மக்களுக்கு கூலி வேலையை ஏற்படுத்தித் தந்தது.
  • புதிய சம்பூரண கிராம் வேலைவாய்ப்பு திட்டத்துடன், வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் மற்றும் ஜவகர் கிராம் வேலைவாய்ப்பு திட்டமும் செப்டம்பர் 2001ல் இணைக்கப்பட்டது.

பிரதமரின் வேலைவாய்ப்புத் திட்டம் (Pradhan Mantri Gramodaya Yojana – PMGY)

  • இத்திட்டமானது 2000-2001 நிதிநிலை அறிக்கையின்போது அறிமுகப்படுத்தப்பட்டது.
  • இத்திட்டம் சுகாதாரம், அடிப்படைக் கல்வி, குடிநீர், வீட்டு வசதி மற்றும் கிராமப்புறங்களில் சாலை அமைத்தல் ஆகியவற்றில் கவனம் செலுத்தியது.

பொன்விழா ஆண்டு ஊரக தன் வேலை வாய்ப்புத் திட்டம் (Swarna Jayanti Shahari Rozgar Yojana-SJSRY).

  • நகர்புற சுயவேலைவாய்ப்பையும், மற்றும் நகர்ப்புற கூலி வேலை ஆகிய இவ்விரண்டும் சிறப்பு திட்டங்களாகும்.
  • 1997-ம் ஆண்டு நகர்ப்புற வறுமை ஒழிப்பு திட்டத்தின்கீழ் செயல்பட்டு வந்த முந்தைய திட்டங்களை இத்திட்டமானது மாற்றி அமைத்தது. மத்திய-மாநில அரசுகளும் 75 : 25 என்ற விகிதத்தில் திட்டத்திற்கு தேவையான செலவை மேற்கொள்கின்றனர்.

கிராம ஒருங்கிணைந்த வளர்ச்சித் திட்டம் (Integrated Rural Development Programme – IRDP)

  • 1976-77-ம் ஆண்டில் மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் இத்திட்டம் முதன் முதலாக முன்மொழியப்பட்டது.
  • இத்திட்டம் கிராம மக்களுக்கு உதவிச் செய்யவும், பொருளாதார வளர்ச்சி நலன்களை, கிராமப்புற பகுதிகள் பெற்று பயனடைவதையே நோக்கமாக கொண்டது.
  • 1978-79ல் இத்திட்டமானது மாற்றியமைக்கப்பட்டு அதன் அளவு விரிவாக்கப்பட்டது.
  • 1980 அக்டோபர் 2-ல் நாட்டின் எல்லா தொகுப்புகளுக்கும் இத்திட்டம் விரிவாக்கப்பட்டது. சிறிய மற்றும் எல்லைநிலை விவசாயிகள் மட்டுமில்லாமல் இத்திட்டம் குறிப்பாக விவசாய தொழிலாளர் மற்றும் நிலமற்ற உழைப்பாளர்கள் இவர்களோடும்கூட கிராமப்புற கைவினைஞர்களையும் உள்ளடக்கி உள்ளது.
  • இது தனி நபரைக் காட்டிலும், குடும்ப நலத்திற்கே முக்கியத்துவம் அளிக்கிறது.

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!