இந்தியாவில் மாநில நிதி மூலங்கள் பற்றி சிறு குறிப்பு வரைக

மாநில நிதி மூலங்கள் (வரிகள் மூலம் பெறப்படுபவை)

  • மாநிலப் பட்டியலில் கூறப்பட்டுள்ள துறைகளிலிருந்து பெறப்படும் வரிகள் மாநிலத் தொகுப்பு நிதியில் சேர்க்கப்படும். 
  • பொதுப்பட்டியலில் உள்ள துறைகளின் மீதான வரிவிதிக்கும் அதிகாரமும், வரி வசூலிக்கும் அதிகாரமும் மாநில அரசிற்கு உண்டு. 
  • Y.V. ரெட்டி தலைமையிலான 14-ஆவது நிதி ஆணையத்தின் அறிக்கை, மத்திய அரசின் வரிகள் மூலம் பெறப்படும் வருமானத்தில் 42% மாநில அரசுகளுக்கு வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியது.
  • இதனை மத்திய அரசு ஏற்றுக் கொண்டுள்ளது. இதனையடுத்து இது ஏப்ரல் 1, 2015 முதல் நடைமுறைக்கு வந்தது.
  • சில வரிகள் மத்திய அரசால் விதிக்கப்பட்டு மாநில அரசு வசூலித்து தாங்களே பயன்படுத்திக் கொள்ளும் பண்புடையன.
    எ.கா.:காசோலை வரி, முத்திரைத்தாள் வரி. (அரசியலமைப்பு விதி 268)

சேவை வரி 

  • இவ்வரி மத்திய அரசால் விதிக்கப்பட்டு, மத்திய மற்றும் மாநில அரசுகளால் வசூலிக்கப்பட்டு தங்களுக்குள் பகிர்ந்து கொள்ளும் வகையைச் சார்ந்தது. 
  • (அரசியலமைப்பு விதி 268-A) மத்திய அரசால் விதிக்கப்பட்டு, வசூலிக்கப்பட்டு, மாநில அரசிற்கு பகிர்ந்து தரப்படும் வரிகள், மாநிலத் தொகுப்பு நிதியில் சேர்க்கப்படும்.
  • எ.கா.: மாநிலங்களுக்கிடையேயான வணிகத்தின் மீதான விற்பனை வரி.
    மாநிலங்களுக்கிடையேயான வணிகத்தில், பொருள்களின் மீதான வரி (அரசியலமைப்பு விதி 209).
  • மத்திய அரசால் விதிக்கப்பட்டு, வசூலிக்கப்படும்
    மத்திய மாநில அரசுகளுக்கு இடையே பகிர்ந்தளிக்கப்படும் வரிகள்;
    பெரும்பான்மையான வரிகள் இவ்வகையின் கீழ் அடங்கும்.
    (அரசியலமைப்பு விதி 270)
  • மாநில அரசால் விதிக்கப்பட்டு, வசூலிக்கப்பட்டு உடயோகிக்கப்படும் வரிகள் மாநில அரசிற்கென பிரத்யேகமாக உள்ள வரிகளாகும்.
  • அவை, நில வருவாய் (தீர்வை வரி உட்பட) விற்பனை மற்றும் செய்தித்தாள் தவிர மற்ற பொருள்கள் மீதான வரிகள்
  • வேளாண்மை வருவாய் மற்றும் நிலம் ஆகியவற்றின் மீது விதிக்கப்படும் வரிகள்
  • ‘நிலம், மனைகள், கட்டடங்கள் மீது விதிக்கப்படும் வரிகள்
  • வேளாண்மை நிலம் சார்பான வேளாண் பண்ணை வரிகள்
  • மதுவகைகள் மீது விதிக்கப்படும் ஆயத் தீர்வைகள்
  • ஒரு மாநிலத்திலிருந்து, பிரிதொரு மாநிலத்திற்கு பண்டங்களைக் கொண்டுவரும் போது விதிக்கப்படும் வரிகள்
  • கனிமப் பொருட்களின் உரிமங்கள் மீது விதிக்கப்படும் வரிகள் மின்சார நுகர்வு, விற்பனை மீதான வரிகள்
  • விலங்குகள், படகுகள், வாகனங்கள் மீது விதிக்கப்படும் வரிகள் இருப்புப்பாதை, உள்நாட்டு நீர்வழி ஆகியவற்றில் கொண்டு
    செல்லும் சரக்குகள், பயணிகளின் மீது விதிக்கப்படும் வரிகள் முத்திரைத் தாள் வரிகள், நீதிமன்ற கட்டணம் மற்றும் பதிவுக் கட்டணங்கள்.
  • பொழுதுபோக்கின் மீது விதிக்கப்படும் வரிகள் விளம்பரங்கள், செய்தித்தாள் தவிர்த்து பிற விளம்பரங்கள் மீதான வரிகள் தொழில்கள், வர்த்தகம், வேலைகள் மீதான வரிகள்
  • பிற வருமானங்கள் அதாவது பதிவுக் கட்டணம், வருமான வரியில் ஒரு பகுதி, சுங்கவரிகள் மற்றும் கடன்கள் மீதான வரிகள்

மாநில அரசின் நிதி மூலங்கள் (வரிசாரா வருவாய்)

  • மாநில பாசனம் 
  • காடுகள் 
  • மீன்வளம் 
  • மாநில பொதுத்துறை நிறுவனங்கள். வரிசார்ந்த வருமானம் மற்றும் வரிசாராத வருமானம் மட்டுமின்றி மத்திய அரசு வழங்கும் மானியங்களும் மாநில அரசின் நிதியாகவே கருதப்படும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!