உயிரி உரங்கள் (Bio- Fertilizer) என்றால் என்ன?அதன் வகைகள் மற்றும் பயன்கள் பற்றி விவரி 

உயிரி உரங்கள் (Bio- Fertilizer)

  • உயிரி உரம் என்பது உயிருள்ள அல்லது மறையுயிர் செல்களின் செயலாக்கம் மிக்க நுண்ணுயிரி இரகங்களைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது.
  • இவ்வுயிரி உரங்கள் விதை மூலமாகவோ, மண் மூலமாகவோ இடப்படும்போது தங்களுடைய வினையாற்றல் மூலம் வேர் மண்டலத்திலுள்ள ஊட்டச்சத்துக்களைப் பயிர்கள் எடுத்துக்கொள்ள உதவுகின்றன.
  • உயிரி உரங்கள் நுண்ணுயிரி வளர்ப்பு உரம், உயிரி உட்புகுத்திய உரங்கள் மற்றும் பாக்டீரிய உட்புகுத்தி உரங்கள் என்றும் அழைக்கப்படுகின்றன.

உயிரி உரங்களின் வகைப்பாடு:

நைட்ரஜனை நிலைநிறுத்தும் உயிரி உரங்கள்

  • ரைசோபியம், அனபீனா அசோலா

பாஸ்பரஸை கரைக்கும் உயிரி உரங்கள் 

  • பெனிசிலியம், ஆஸ்பர்ஜில்லஸ்

பாஸ்பரசை திரட்டும் உயிரி உரங்கள்

  • அமானிடா

நுண் ஊட்டசத்துக்களுக்கான உயிரி உரங்கள்

  • பேசில்லஸ்

தாவர வளர்ச்சியை ஊக்குவிக்கும் ரைசோபாக்டீரியா

  • சூடோமோனாஸ்

உயிரி உரங்களின் பயன்பாடுகள்:

  • நைட்ரஜன், பாஸ்பரஸ், மற்றும் ஊக்குவிக்கும் பொருட்களின் மூலம் தாவர வளர்ச்சிக்கு இயற்கை ஊட்டச்சத்துக்களை சேர்க்கின்றன.
  • உபரி உரங்கள் பூச்சிகொல்லிகளைப் பயன்படுத்துவதை குறைக்க எதிர்ப்பார்க்கலாம்.
  • உயிர் உரங்களில் உள்ள நுண்ணுயிர்கள் மண்ணின் இயற்கை ஊட்டச்சத்து சுழற்சி முறையில் மீட்டெடுக்கின்றன. மற்றும் மண் உபிரினத்தை உருவாக்குகின்றன.
  • உயிர் உரங்களை பயன்படுத்துவதன் மூலம், ஆரோக்கியமான தாவரங்களை வளர்க்க முடியும்.
  • ரைசோபியம், அஸோடோபாக்டர், அஸோஸ்பைரிலியம் மற்றும் நீல பச்சை பாசிகள் போன்ற உயிர் உரங்கள் நீண்ட காலமாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
  • ரைசோபூமினோலூலண்ட் கால்நடையியல் பயிர்களுக்கு பயன்படுத்தப்படுகிறது.
  • கோதுமை, மக்காச்சோளம், கடுகு, பருத்தி, உருளைக்கிழங்கு மற்றும் பிற காய்கறிப் பயிர்கள் போன்ற பயிர்களுடன் பயன்படுத்தப்படலாம்
  • சோளம், கம்பு, கரும்பு மற்றும் கோதுமை ஆகியவற்றிற்கு அசோஸ்பைரில்லம் பரிந்துரைக்கப்படுகிறது.

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!