உலக பட்டினி குறியீடு பற்றி சிறு குறிப்பு எழுதுக

  • 2000 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு நாடுகளில் பசியின் நிலையை வரைபடமாக்க உலக பட்டினி குறியீடாக வெளியிடப்படுகிறது.
  • 2022 ஆம் ஆண்டில் உலகளாவிய பசி குறியீட்டில் இந்தியா 121 நாடுகளில் 107 வது இடத்தில் உள்ளது (“தீவிரமான வகை” கீழ்)

வெளியீட்டு நிறுவனங்கள்:

  • உலக பட்டினி குறியீடு ஆனது Concern Worldwide மற்றும் Welthungerlife ஆகியவற்றால் கூட்டாக வெளியிடப்படுகிறது.

ஆணை:

  • பட்டினியை வரைபடமாக்குவதற்கான காரணம் “2030-க்குள் பூஜ்ஜிய பட்டினியை” உலகம் அடைவதை உறுதி செய்வதே ஆகும்- 
  • ஐக்கிய நாடுகள் சபை வகுத்துள்ள நிலையான வளர்ச்சி இலக்குகளில் இது ஒன்று ஆகும்.
  • இந்த காரணத்திற்காகவே சில உயர் வருமானம் கொண்ட நாடுகளுக்கு உலக பட்டினி குறியீடு   கணக்கிடப்படுவதில்லை.

பயன்படுத்தப்படும் அளவுகள்:

  • உலக பட்டினி குறியீடு நான்கு முக்கிய அளவுகள் மூலம் வெவ்வேறு நாடுகளின் செயல்திறனைக் கண்காணிக்கிறது.
  1. ஊட்டச்சத்து குறைபாடு (இது போதிய உணவு இன்மையை  பிரதிபலிக்கிறது)
  2. குழந்தை விரயமாதல் (இது ஊட்டச்சது குறைபாட்டின்  கடுமைமையை  பிரதிபலிக்கிறது)
  3. குழந்தை வளர்ச்சி குன்றியது (இது ஊட்டச்சத்தின் குறைபாட்டின் நாள்பட்ட நிலையை பிரதிபலிக்கிறது)
  4. குழந்தை இறப்பு (இது போதிய ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியமற்ற சூழல் இரண்டையும் பிரதிபலிக்கிறது)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!