குழந்தைத் தொழிலாளருக்கான காரணங்களை பட்டியலிடுக.

  • குழந்தைத் தொழிலாளர் பெருக்கத்திற்கு பல்வேறு சமூகப் பொருளாதார காரணிகள் காரணமாகின்றன.

வறுமையும் கடனும்:

  • வறுமை நிலையில் உள்ள குடும்பங்களுக்கு, குழந்தையின் உழைப்பின் மூலம் பெறப்படும் பணமானது அக்குடும்பத்தின் வாழ்வாதாரத்திற்கு முக்கியமானதாகும்.
  • குடும்பத்தின் கடன் பளூவால், குழந்தைகள் கட்டாய வேலையில் அமர்த்தப்படுகின்றனர்.

குழந்தைத் தொழிலாளர் முறைக்கான காரணங்கள்

  • சம்பளம் குறைவான நிலையிலும் முதலாளியின் கட்டளைக்கு இணங்க வேலை செய்தல்.
  • தங்கள் உரிமைகளை குறித்து அறியாமை.
  • குறைந்தபட்ச கல்வி, திறன் மேம்பாடு கிடைக்கப்பெறாமை.
  • வீட்டில் பெரியோர் வேலைவாய்ப்பில்லா நிலை அல்லது குறைந்த வேலைவாய்ப்பும் குழந்தைத் தொழிலாளரை ஊக்குவிக்கிறது.
  • பெற்றோரின் கல்வியறிவின்மையும், அறியாமையும்
  • பெரிய குடும்பங்கள், குறைந்த வருமானம்
  • பாரம்பரிய முறைப்படி, குழந்தைகள் தங்கள் குடும்ப வேலையை செய்தல்.
  • பாகுபாடும், இடப்பெயர்வும்.
  • நிலமில்லாமை அதிகரிப்பதால் ஊதியம் மற்றும் ஒப்பந்த வேலையை சார்ந்திருக்க வேண்டி உள்ளது.
  • சட்டங்களின் நடைமுறையில் குறைபாடு

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!