சூரிய ஆற்றல் என்றால் என்ன? சூரிய வெப்பப் பயன்பாடுகள் பற்றி எழுதுக

சூரிய ஆற்றல்

  • சூரிய ஆற்றல் என்பது சூரியனில் இருந்து ஆற்றலை வெப்ப ஆற்றலாக அல்லது மின்னாற்றலாக மாற்றப்படுகிறது.
  • சூரிய ஆற்றல் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலமாகும். இந்த ஆற்றல் அளவிட முடியாத அளவு நமக்கு கிடைக்கிறது. மற்றும் அவ்வகையிலும் சுற்றுச்சூழலை மாசுபடுத்துவதில்லை.

சூரிய வெப்பப் பயன்பாடுகள்

தட்டையான – பட்டை சேகரிப்பான்

  • இந்த தட்டையான பட்டை சேகரிப்பான் ஒரு கருப்பு உலோகத் தகட்டைக் கொண்டிருக்கும், ஒன்று (அ) இரண்டு கண்ணாடி தாள்கள் சூரிய ஒளியால் வெப்பமடைகிறது.
  • சூரிய ஆற்றலானது பொதுவாக நீரை சூடேற்றவும், வீட்டை சூடாக்கவும் பயன்படுகின்றன.

சூரிய குளங்கள்

  • சூரிய சக்தியை சேகரித்து மற்றும் சேமித்து வைக்க வடிவமைக்கப்பட்ட உப்பு நீர் உடலங்களாகும்.
  • அத்தகைய குளங்களில் இருந்து எடுக்கப்படும் வெப்பம் ரசாயணங்கள், உணவு, ஜவுளி மற்றும் பிற தொழில்துறை சார்ந்த பொருட்களை உற்பத்தி செய்யவும், பசுமை இல்லங்கள், நீச்சல் குளங்கள் மற்றும் கால்நடை கட்டிடங்களை சூடாக்கவும் (அ) வெப்பப்படுத்த பயன்படுகிறது.

சூரிய அடுப்புகள்

  • சூரிய அடுப்பானது சூரிய ஒளியை ஒரு பரந்த பகுதியிலிருந்து ஒரு மையப் புள்ளியில் குவிக்கின்றன. இதிலுள்ள கருப்பு மேற்பரப்பானது சூரிய ஒளியை வெப்பமாக மாற்றுகிறது.
  • சூரிய ஒளி அடுப்பானது எளிதில் எடுத்துச் செல்லக்கூடியது மற்றும் இதற்கு வேறு எரிபொருள் கொடுக்கத் தேவையில்லை.

மின்சார உற்பத்தி

ஒளி மின்னழுத்தக் கலம்

  • ஒளி மின்னழுத்த சாதனங்கள் சூரிய ஒளியிலிருந்து நேரடியாக மின்சாரத்தை தயாரிக்கின்றன.
  • இந்த பொருட்களில் உள்ள எலக்ட்ரான்கள் சூரிய சக்தியால் விடுவிக்கப்பட்டு தூண்டப்பட்டு மின்சுற்றின் வழியே பயணித்து மின் சாதனங்களை இயக்கும் அல்லது மின்சாதன கட்டத்திற்கு அனுப்புகிறது.
  • அதிக எண்ணிக்கையிலான தனிப்பட்ட சோலார் (அ) சூரிய கலங்களை ஒன்றாக இணைப்பதன் மூலம், ஒரு சூரிய மின்சார ஆலை அல்லது ஒரு பெரிய வீட்டு வரிசையிலான ஆயிரக்கணக்கான கிலோவாட் மின்சார ஆற்றலைக் கூட உருவாக்க முடியும்.

சூரிய ஆற்றலின் மற்றப்பிற பயன்கள்

  • சூரிய ஆற்றலினால் கடல் நீரிலிருந்து ஆவியாதல் மூலம் உப்பை உற்பத்தி செய்ய இயலும்.
  • சூரிய ஆற்றலினால் உப்புநீரை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ சூரியசக்தியால் மாற்றுகின்றன.
  • குடிநீராக இயங்கும் அலகுகள் மூலம் உப்புநீரை ஹைட்ரஜன் ஆற்றலுக்கு மாற்றாக சுத்தமான மற்றும் புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தியை சூரிய தொழில்நுட்பம் உருவாக்கியுள்ளது.
  • ஒளிச்சேர்க்கை செயல்முறையில் செயற்கை இலைகள், சிலிக்கானைப் பயன்படுத்தி நீரிலுள்ள ஹைட்ரஜன் (ம) ஆக்ஸிஜனை பிரிக்க சூரிய ஒளி பயன்படுகிறது. இதில் கிட்டத்தட்ட எவ்வித மாசுக்களும் வெளிவருவதில்லை.

நன்மைகள்

  • சூரிய ஆற்றலைப் பயன்படுத்துவதால் சுற்றுச்சூழலில் எவ்வித மாசுபாட்டையும் ஏற்படுத்தாது.
  • சூரிய ஆற்றலை வெப்பமாக்கல் மற்றும் விளக்குகளுக்கு பயன்படுத்தலாம்.
  • சூரிய ஆற்றலானது அழியா ஆற்றல் மூலமாகும், இது இலவசமாகக் கிடைக்கிறது.
  • இதை மின்னாற்றலாக மாற்றி பல பயன்பாடுகளுக்கு உபயோகிக்கலாம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!