தமிழகத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட தொட்டில் குழந்தை திட்டம் பற்றி எழுதுக

தொட்டில் குழந்தை திட்டம்

  • தமிழ்நாட்டில் சில மாவட்டங்களில் மட்டும் நடைபெற்று வந்த பெண் குழந்தை கொலையை முற்றிலும் ஒழித்திடும் நோக்கத்தில் கொண்டு வரப்பட்ட திட்டமாகும்.
  • இத்திட்டம் 1992 ஆம் ஆண்டில் இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழ்நாட்டில் அறிமுகம் செய்யப்பட்டது.
  • முதன்முதலாக சேலம் மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட இத்திட்டம், 2001 ஆம் ஆண்டில் மதுரை, தேனி, திண்டுக்கல் மற்றும் தருமபுரி மாவட்டங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டது.
  • தமிழ்நாட்டில் பெண் குழந்தைகள் பிறந்த பின்னர் அவர்களை பல்வேறு காரணங்களுக்காக சுமை என்று எண்ணுவோர் அவர்களைக் கொலை செய்வது அல்லது பொது இடங்களில் வீசி எறிவது போன்ற செயல்கள் சில மாவட்டங்களில் அதிக அளவில் நடந்து வருகிறது.
  • இதனைத் தடுக்க அரசு மருத்துவமனைகள், ஆதரவற்றோர் இல்லங்கள், ஆரம்ப சுகாதார மையங்கள் போன்ற இடங்களில் தொட்டில்கள் வைக்கப்படுகின்றன.
  • பெண் குழந்தைகளைக் கொலை செய்வதற்கு பதில், இத்தொட்டில்களில் குடும்பத்தார் இட்டுச் செல்கின்றனர்.
  • இக்குழந்தைகள் தமிழ்நாடு அரசால் ஏற்படுத்தப்பட்டுள்ள தொட்டில் குழந்தை மையங்களால் வளர்க்கப்படுகின்றன.
  • பெண் சிசுகொலையை தடுக்க தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது.
  • அதிலும் 1992இல் துவக்கப்பட்ட தொட்டில் குழந்தை திட்டம் தமிழகத்தில் பல பெண் குழந்தைகளுக்கு மறுவாழ்வு அளித்தது.
  • பிறந்தவுடனே பெற்றோர்களால் கைவிடப்படும் பெண் சிசுக்கள் இந்த திட்டம்  மூலம் அரசாங்கத்தால் வளர்க்கப்படுகிறார்கள்.
  • 1992 முதல் 2014 வரை, இந்த திட்டத்தின் கீழ் 4000க்கும்  மேற்பட்ட பெண் குழந்தைகளின் உயிர்கள் பாதுகாக்கப்பட்டு உள்ளன.

அறிமுகப்படுத்தப்பட்ட மாவட்டங்கள்

  • சேலம்
  • மதுரை
  • திண்டுக்கல்
  • தேனி
  • தருமபுரி
  • திட்டங்களால் பெண் சிசுக்களின் உயிர்களைக் காக்கும் நிலை மாறி, சமூகத்தில் மாற்றம் வர வேண்டியது அவசியம்.
  • அத்துடன் பெண் குழந்தைகளுக்கு கல்வியும் சம வாய்ப்பும் அளிக்கப்பட வேண்டும். சமூகத்தில் அவர்களுக்கு பாதுகாப்பை ஏற்படுத்தித் தருவது நம் ஒவ்வொருவரின் கடமை.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!