தமிழகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள திருமண உதவித் திட்டங்கள் பற்றி விரிவாக எழுதுக

மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவித் திட்டம்

  • குறிக்கோள்: பொருளாதார ரீதியில் பின்தங்கிய பெற்றோரின் மகளுக்கு திருமண உதவி அளித்தல் மற்றும் கல்வி நிலையை மேம்படுத்தல்.
  • மணப்பெண் 10வது வகுப்பு படித்திருந்தால் (18 வயது) 25,000 ரூ. காசோலை, 8 கிராம் தங்கக்காசு
  • மணப்பெண் டிகிரி / டிப்ளமோ முடித்திருப்பின் (21 வயது)-ரூ.50,000 காசோலை, 8 கிராம் தங்கக் காசு
  • ஒரு குடும்பத்தில் ஒரு பெண் மட்டுமே தகுதி உடையவர்.
  • திருமணத்திற்கு 40 நாட்களுக்கு முன்னரே விண்ணப்பிக்க வேண்டும்.

அன்னை தெரேசா நினைவு காப்பக பெண்கள் திருமண உதவித் திட்டம்.

  • குறிக்கோள்: வறிய நிலையிலுள்ள காப்பக பெண்களின் கல்வித் தகுதியை உயர்த்தல்.
  • மணப்பெண் 10வது தேர்ச்சி (18 வயது) – 25,000 ரூ. காசோலை, 8 கிராம் தங்கக்காசு.
  • மணப்பெண் டிகிரி / டிப்ளமோ தேர்ச்சி (21 வயது) 50,000 ரூ. காசோலை, 8 கிராம் தங்கக் காசு.
  • திருமணத்திற்கு 40 நாட்களுக்கு முன்னரே விண்ணப்பிக்க வேண்டும்.

மருத்துவர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு கைம்பெண் மறுமணத் திட்டம்

      • குறிக்கோள்கள்: விதவைகளின் மறுவாழ்வை உறுதி செய்ய மறுதிருமணத்தை ஊக்கப்படுத்தல்.
      • மணப்பெண் 10வது படித்திருப்பின்: 15,000ரூ காசோலை, ரூ. 10,000 NSC பாண்டு, 8 கிராம் தங்கக்காசு
      • மணப்பெண் பட்டப்படிப்பு/பட்டயப்படிப்பு முடித்திருப்பின் : ரூ.30,000/ காசோலை, NSC பாண்டு ரூ.20,000/-, 8 கிராம் தங்கக் காசு.
      • .வயது வரம்பு 20 – 40வயது
      • திருமணத்திற்கு 6 மாதத்திற்கு முன்னரே விண்ணப்பித்தல்
      • கீழ்காணும் சான்றிதழ்களை சமர்பிக்க வேண்டும்.
        • முதல் கணவன் இறந்ததற்கான இறப்புச் சான்று
        • திருமணப் புகைப்படம், விதவை சான்றிதழ், முதல்/இரண்டாம் திருமண அழைப்பிதழ்
        • சாதிச் சான்றிதழ், 10வது மதிப்பெண் பட்டியல், டிகிரி சான்றிதழ், போன்றவை

ஈ.வே.ரா. மணியம்மையார் நினைவு வறிய விதவையின் பெண்ணுக்கான திருமண உதவித் திட்டம்:

      • குறிக்கோள்கள்: மகளின் திருமணத்திற்கு நிதி உதவி அளிப்பதன் மூலம்
      • வறுமை நிலையிலுள்ள விதவை தாய்க்கு உதவுதல்.
      • வறிய விதவையின் ஒரு பெண்ணுக்கு மட்டுமே உதவி வழங்கப்படுகிறது.
      • மணப்பெண் 10வது தேர்ச்சி (18 வயது) பெற்றிருப்பின் -ரூ.25,000 காசோலை, 8 கிராம் தங்கக் காசு.
      • மணப்பெண் டிகிரி / டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருப்பின் (21 வயது) ரூ. 50,000/- காசோலை, 8 கிராம் தங்கக் காசு.
      • ஆவணங்கள்:
        • 10 வது மதிப்பெண் பட்டியல், மாற்றுச் சான்றிதழ், கைம்பெண் சான்றிதழ், கணவரின் இறப்பு சான்றிதழ்.
        • வருமானச் சான்றிதழ், திருமண அழைப்பிதழ்.
        • விண்ணப்பதாரர் புகைப்படம், சாதிச் சான்றிதழ்.

டாக்டர். முத்துலட்சுமி ரெட்டி நினைவு சாதி மறுப்பு திருமண உதவித் திட்டம்:

  • மணப்பெண் 10வது படித்திருப்பின் – ரூ. 15,000 காசோலை, NSC பாண்டு ரூ.10,000/-, 8 கிராம் தங்கக் காசு.
  • மணப்பெண் டிகிரி / டிப்ளமோ படித்திருப்பின் ரூ. 30,000/- காசோலை, NSC பாண்டு ரூ.20,000/-, 8 கிராம் தங்கக் காசு.
  • திருமணத்திற்கு 2 வருடம் முன்பே விண்ணப்பித்தல்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!