நகரமயமாக்கலில் உள்ள சிக்கல்களை தீர்க்கும் எளிய வழிமுறைகளை குறிப்பிடுக.

நகரமயமாதல்

  • நகரமயமாதல் என்பது கிராமப்புறங்களில் இருந்து மக்கள் நகரத்திற்கு குடியேறுவதாகும்.
  • நகரமயமாதலை ஊக்குவிக்கும் காரணிகள் தொழில்மயமாதல், வர்த்தகமயமாதல் மற்றும் அதிகப்போக்குவரத்து சேவைகள் மற்றும் தகவல் பரிமாற்றம் ஆகியவை ஆகும்.

நகரமயமாக்கலுக்கான தீர்வுகள்

  • நகரங்களில் நவீன முறையில் இடம் சார்ந்த திட்டமிடல் மற்றும் பொதுப் பயன்பாடுகளுக்கான தரமான வடிவமைப்புகளை அமைத்தல்.
  • நகர மற்றும் கிராமப்புறங்களில் அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்குதல்.
  • கிராமப்புறங்களில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் கிராமப் புறங்களில் நகர்ப்புற வசதிகளை வழங்குதல் (PURA) திட்டம், ஷியாமா பிரசாத் முகர்ஜி ரர்பன் மிஷன் ஆகியவற்றில் கவனம் செலுத்துதல்
  • அனைவரையும் உள்ளடக்கிய நகரமயமாதல் : நகர்ப்புற ஏழைகள் மற்றும் பிற பாதிக்கப்படக்கூடிய மக்களின் தேவைகளை வீட்டுவசதி கல்வி (ம) சுகாதாரப் பாதுகாப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்துதல்.
  • சுற்றுச்சூழல் பாதுகாப்புடன் கூடிய நகரமயமாக்கல்:
  • நகர்ப்புற வளர்ச்சியை நிர்வகித்தல்
  • ஈர நிலங்கள் மற்றும் பசுமையான இடங்களை ஒருங்கிணைத்தல் 3. முறையான கழிவு மேலாண்மை –
  • நகர்ப்புறங்களில் முறையான போக்குவரத்து அமைப்பினை ஏற்படுத்துதல்
  • பொது இடங்களில் கண்காணிப்பு கேமராக்களை நிறுவுதல், நகர்ப்புற குற்றங்களை குறைக்க சமூககாவலர்கள் போன்ற பல்வேறு பாதுகாப்பு
  • நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்.
  • நகர்ப்புறத்தூய்மை (ம) சுகாதாரத்தை மேம்படுத்தல் (எ.கா.) தூய்மை இந்தியா திட்டம்
  • நகர்ப்புறங்களுக்கான முக்கிய அரசுக் கொள்கைகளை (AMRUT, JNNURM, பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா, பொலிவுறு நகரங்கள்) முறையாக செயல்படுத்துதல்
  • .நகர்ப்புறங்களில் நல்ல நிர்வாகத்தை நிலைப்படுத்த:
  • நிதிப் பரவல்
  • நகராட்சி பத்திரங்களை முறையாக ஒழுங்குப்படுத்துதல்
  • மாநகராட்சி மற்றும் நகராட்சிகளுக்கு அதிகாரமளித்தல்
  • வெளிப்படைத்தன்மை (ம) பொறுப்புடைமை
  • மக்களின் பங்கேற்பு

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!