பணியிடப் பாலியல் தொல்லைகளை தடுப்பதற்கான உச்ச நீதிமன்றம் வழங்கிய முக்கிய வழிகாட்டுதல்கள் (விசாகா வழிகாட்டல்) பற்றி எழுதுக.

விசாகா முக்கிய வழிகாட்டுதல்கள்:

  • அரசு / தனியார் முதலாளிகள் தங்கள் அலுவலகத்தில் பாலியல் தொல்லைகள் ஏற்படுவதைத் தடுத்தல்.
  • பாதுகாப்பான, சுகாதாரமான, பணிச்சூழலை ஏற்படுத்தல்.
  • பெண்களுக்கு பாதிப்பில்லா சூழலை உருவாக்குதல். தங்கள் வேலைத்திறனை முழுவதும் வெளிக்காட்ட பெண்களுக்கு ஊக்கமளித்தல்.
  • இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் பிற சட்டங்களின் கீழ் தவறு இழைக்கப்பட்டால், சம்பந்தப்பட்ட துறையிடம் புகாரளித்தல்.
  • பாலியல் துன்புறுத்தல்களால் பாதிப்படைந்தவர்களின் விருப்பத்தின் பேரில் அவரையோ (அ) துன்புறுத்தியவரையோ இடமாற்றம் செய்தல்.

உச்ச நீதிமன்றம் வலியுறுத்திய தடுப்பு முறைகள்:

    • புகார் அளிக்க ஒவ்வொரு அலுவலகத்திலும் தனி வழிமுறையை வகுத்தல்.

புகார்க் குழு:

      • தலைமை நிர்வாகியால் நிறுவப்படும்
      • பெண் தலைமை வகிப்பார்.
      • குழுவில் பாதி உறுப்பினர்கள் பெண்களாக இருக்க வேண்டும்.
      • பெண் ஊழியர்கள் அளிக்கும் பாலியல் சார் தொல்லைகள் குறித்த புகார்கள் இக்குழுவினால் விசாரிக்கப்படும்.
    • பெண் ஊழியரின் உரிமைகள் குறித்து விழிப்புணர்வு
    • பாலியல் தொல்லைகள் குறித்து ஊழியர்கள் கலந்துரையாடல், நிர்வாகி தொழிலாளர் சந்திப்பின் போது விவாதித்தல்.
    • மூன்றாம் (அ) வெளி நபர்களால் பாலியல் பாதிப்பு இருப்பின் நிர்வாகிகள் வழிகாட்டுதல்.
    • மத்திய மாநில அரசுகள் தகுந்த வழிமுறைகளை முன் மொழிந்து தனியார் துறையினரும் விசாகா வழிமுறைகளை பின்பற்றுவதற்கு வலியுறுத்துகிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!