பெண்கள் அதிகாரமளிப்பு என்றால் என்ன? பெண்கள் அதிகாரமளிப்பிற்கு செய்யவேண்டியவையாக நீங்கள் எதை கருதுகிறீர்கள்.

பெண்கள் அதிகாரம்

  • பெண்கள் அதிகாரம் (Women’s empowerment ) என்பது பெண்களை மேம்படுத்தும் ஒரு செயல்முறையாகும்.
  • அதிகாரமளித்தல் என்பது முடிவெடுக்கும் செயல்முறைக்கு வெளியே இருக்கும் மக்களை (பெண்களை) ஏற்றுக்கொள்வதையும் அனுமதிப்பதையும் குறிக்கிறது.
  • அதனுள். “இது அரசியல் கட்டமைப்புகள் மற்றும் முறையான முடிவெடுப்பதில் பங்கேற்பதற்கும், பொருளாதாரத் துறையில், பொருளாதார முடிவெடுப்பதில் பங்கேற்க உதவும் வருமானத்தைப் பெறுவதற்கான திறனுக்கும் வலுவான முக்கியத்துவம் அளிக்கிறது.”

பெண்களுக்கு அதிகாரமளிப்பதற்கான வழிமுறைகள்

  • ஒட்டுமொத்த பெண்கள் மேம்பாட்டை உறுதி செய்தல், பாலின சமத்துவம், பாலின நீதி ஆகியவற்றை துறைகளுக்கிடையேயான கூட்டு திட்டங்கள் மூலம் ஏற்படுத்தல்.
  • பெண்களுக்கு நேர்மறை தாக்கத்தை ஏற்படுத்துவதன் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்தி, அனைத்து தரப்பினரையும் ஒருங்கிணைப்பது
  • பெண்கள் தங்கள் உள்ளாற்றல் முழுவதையும் அடைவதற்கு வளர்ச்சி பெற உதவும் வண்ணம், நேரிய பொருளாதார மற்றும் சமூக கொள்கையின் மூலமாக, தகுந்த சூழலை உருவாக்குதல்.
  • அரசியல், பொருளாதார, சமூக, பண்பாட்டு, குடிமை ஆகிய அனைத்து நிலைகளிலும் ஆண்களுக்கு நிகராகப் பெண்கள் அனைத்து மனித உரிமைகளையும் அடிப்படை சுத்தந்திரத்தையும் சட்டப்படியும் நடைமுறையிலும் அனுபவித்தல்.
  • நாட்டின் சமூக, அரசியல், மற்றும் பொருளாதார வாழ்க்கையில் பங்கு பெற்று முடிவெடுப்பதில் பெண்களுக்கு சமவாய்ப்பு.
  • ஆரோக்கியம் பேணுதல், அனைத்து நிலைகளிலும் தரமான கல்வி, வேலை மற்றும் தொழில் துறை வழிகாட்டுதல், வேலை வாய்ப்பு, சம ஊதியம், பணியிட சுகாதாரமும் பாதுகாப்பும், சமூகப் பாதுகாப்பு, பொது ஊழியம் ஆகியவற்றில் பெண்களுக்கு சம வாய்ப்பு.
  • பெண்களுக்கு எதிரான அனைத்து வகை பாகுபாடுகளையும் அகற்றும் இலக்குடைய சட்ட அமைப்பை வலுப்படுத்துதல்.
  • பெண்களும் ஆண்களும் ஒன்றிணைந்து செயல்பட்டு சமூக மனப்பான்மையையும் சமுதாய பழக்க வழக்கங்களையும் மாற்றுதல்.
  • வளர்ச்சி முறையில் ஒரு பாலியல் நோக்கை முதன்மைப்படுத்துதல்.
  • பெண்களுக்கும் பெண் குழந்தைகளுக்கும் எதிரான அனைத்து வகையான ஒடுக்குமுறைகளையும் வன்முறைகளையும் அகற்றுதல்.
  • பெண்கள் அமைப்புகள் போன்ற மக்கள் மன்றங்களோடு கூட்டுறவை கட்டி வலுப்படுத்த வேண்டும்.
  • மத்திய, மாநில அளவில் பெண்கள் சார் கொள்கைகள், திட்டங்கள் மூலம் பெண்களுக்கு அதிகாரமளித்தல்.
  • பெண்கள் (ம) குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் மூலம் அமைச்சகங்களுக்கிடையே இணைவை ஏற்படுத்தல்.
  • குறிப்பிட்ட மாவட்டங்களில் பெண்களுக்கான சேவைகளை வழங்குதல்.
  • விழிப்புணர்வு ஏற்படுத்துவதன் மூலம் பெண்கள், குழந்தைகள் சார் திட்டங்களில் பயன்பெறுதல்.
  • பல்வேறு தரப்பினருக்கும் பாலியல் சார்ந்த சிக்கல்களை உணர்த்தி, செயல்திறனைப் பெருக்குதல்.
  • பயிற்சி மையங்களின் பாடத்திட்டத்தில் பாலியல் சார் சிக்கல்களை சேர்த்தல்.
  • பெண் நிர்வாகிகளுக்கு பயிற்சி அளித்தல்.
  • அரசின் திட்டங்கள் மற்றும் பெண்களுக்கான சட்ட உரிமைகள் குறித்த விழிப்புணர்வு

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!