மரபணு மாற்றப்பட்ட உயிரினம் என்பது என்ன? மரபணு மாற்றப்பட்ட பயிர்களின் நன்மைகள் மற்றும் சவால்களை விவரி.

  • மரபணு மாற்றப்பட்ட உயிரினம் (Genetically Modified Organism) (GMO) என்பது மரபணு பொறியியல் மூலம் மரபணுக்களை மாற்றி உருவாக்கப்பட்ட உயிரினம் ஆகும்.
  • மரபணு பொறியியல் என்பது மரபணுக்களைச் செயற்கையாக மாற்றுவதற்கான ஒரு தொழில்நுட்பமாகும்.
  • அது தாவரமாகவோ, விலங்குகளாகவோ அல்லது நுண்ணுயிரிகளாகவோ இருக்கலாம். டிஎன்ஏவில் இருக்கும் ஒரு பண்பை  மாற்றுவதன் மூலம் அல்லது மற்றொரு உயிரினத்திலிருந்து ஒரு மரபணுவைச் இணைப்பதன்  மூலம் இதைச் செய்யலாம்.
  • மரபணு மாற்றப்பட்ட தாவரம் பூச்சிக்கொல்லிகளைத் தாங்கி, காலநிலை மாற்றத்தைத் தாங்கி, வேகமாகவும் சிறப்பாகவும் வளர உதவும்.

மரபணு மாற்றப்பட்ட உயிரினங்களின் எடுத்துக்காட்டுகள்:

உணவு:

  • தக்காளி: வைட்டமின் சி மற்றும் லைகோபீன் அதிகம் உள்ள தக்காளி
  • சோயா: பூச்சி எதிர்ப்புத்தன்மை கொண்ட சோயா
  • கோதுமை: அதிக மகசூல் கொண்ட கோதுமை

மருந்துகள்:

  • இன்சுலின்: நீரிழிவு நோயாளிகளுக்கு இன்சுலின் உற்பத்தி செய்யப் பயன்படுத்தப்படும் பாக்டீரியா
  • ஹெப்பாடிடிஸ் பி தடுப்பூசி: ஹெப்பாடிடிஸ் பி தடுப்பூசி உற்பத்தி செய்யப் பயன்படுத்தப்படும் விலங்குகள்

சுற்றுச்சூழல்:

  • பூச்சிக்கொல்லி எதிர்ப்புத்தன்மை கொண்ட தாவரங்கள்: பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்தாமல் பயிர்களை பாதுகாக்கப் பயன்படுத்தப்படும் தாவரங்கள்
  • மண்ணின் வளத்தை மேம்படுத்தும் பாக்டீரியா: மண்ணின் வளத்தை மேம்படுத்தப் பயன்படுத்தப்படும் பாக்டீரியா

மரபணு மாற்றப்பட்ட பயிர்களின் நன்மைகள்

  • GM பயிர்கள் நோய்கள், பூச்சிகள், பூச்சிகள் மற்றும் களைக்கொல்லிகளுக்கு வலுவான எதிர்ப்பை வழங்குகின்றன, மேலும் குளிர்/வெப்பம், வறட்சி மற்றும் உப்புத்தன்மை ஆகியவற்றிற்கு அதிக சகிப்புத்தன்மையை வழங்குகின்றன.
  • பருவநிலை மாற்றத்தின் ஆபத்துகளில் இருந்து பாதுகாப்பு அளிக்கிறது.
  • அதிகரித்து வரும் மக்கள்தொகைக்கு உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு இது பங்களிக்கும்.
  • பூச்சிக்கொல்லிகளின் அபாயங்கள் மற்றும் செலவுகளைக் குறைப்பதன் மூலம் GM பயிர்கள் விவசாயிகளுக்கு சிறந்த வருமான வாய்ப்புகளை வழங்க முடியும்.
  • பயிர்களின் ஊட்டச்சத்தினை மாற்றியமைக்க முடியும். 
  • உதாரணமாக: அதிக அளவு வைட்டமின் ஏ உற்பத்தி செய்ய மரபணு மாற்றப்பட்ட அரிசி, உலகளாவிய வைட்டமின் குறைபாடுகளைக் குறைக்க உதவியது என்று UN உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு குறிப்பிடுகிறது.

சவால்கள்

  • GM கடுகு போன்ற GMO பயிர்கள் மக்களின் ஆரோக்கியம், சுற்றுச்சூழல் (அது வளர்க்கப்படும் மண்), உணவு சங்கிலி, நிலத்தடி நீர் போன்றவற்றின் தாக்கம் இன்னும் அறியப்படவில்லை.
  • GMO க்கள் ‘எதிர்பார்க்கப்படாத’ விளைவுகள் மற்றும் நச்சுத்தன்மையின் அபாயங்களைக் கொண்டுள்ளன.
  • களைகள் அதிகமாக உற்பத்தி ஆகும் அபாயம் உள்ளது 
  • GMO கள் குறிப்பிடத்தக்க ஒவ்வாமை அபாயங்களை ஏற்படுத்தலாம். மரபணு மேம்பாடுகள் பெரும்பாலும் அசல் உயிரினத்தில் இல்லாத புரதங்களை இணைக்கின்றன.  இது மனிதர்களுக்கு ஒவ்வாமை எதிர்வினைகளை ஏற்படுத்தும்.
  • பல்லுயிரியலை பாதிக்கும் அபாயத்தை கொண்டுள்ளது.
  • GMO கள் விவசாயிகளுக்கு நிதிச் சுமையை உருவாகுகிறது. ஏனெனில் ஒவ்வொரு பயிர்க்கும் GM பயிர் நிறுவனங்களிடமிருந்து விதைகளை புதிதாக வாங்க வேண்டும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!