வறுமை என்பதனை வரையறு.வறுமையின் வகைகளை பட்டியலிடுக

வறுமை

  • 1990-ம் ஆண்டில் உலக வங்கியானது வறுமையை கீழ்க்கண்டவாறு வரையரைச் செய்கிறது. “வறுமை என்பது குறைந்தபட்ச வாழ்க்கை தரத்தை அடைய முடியாத, திறனற்ற நிலையை குறிக்கிறது.”  என்பதாகும்

வறுமையின் வகைகள்

  1. முழுவறுமை
  2. ஒப்பீட்டு வறுமை
  3. தற்காலிகவறுமை (அ) முற்றிய வறுமை (Temporary or Chronic Poverty)
  4. முதல்நிலைவறுமை மற்றும் இரண்டாம் நிலை வறுமை
  5. கிராமப்புறஏழ்மை மற்றும் நகர்புற ஏழ்மை

முழு வறுமை

  • மக்களுக்கு போதுமான உணவு, உடை, உறைவிடம் இல்லாத நிலையை முழுவறுமை நிலை என்கிறோம்.

ஒப்பீட்டு வறுமை

  • ‘ஒப்பீட்டு வறுமை’ என்பது மக்களின் பல்வேறு குழுக்களிடையே (உயர்தர, நடுத்தர, குறைவான வருமானம் பெறுபவர்கள்) காணப்படும் வேறுபாடுகளையோ (அ) ஒரே குழுவினரிடையே காணப்படும் வேறுபாடுகளையோ (அ) பல நாடுகளில் வாழும் மக்களிடையே காணப்படும் வேறுபாடுகளை குறிப்பதாகும்.

தற்காலிக வறுமை (அ) முற்றிய வறுமை (Temporary or Chronic Poverty)

  • இந்தியா போன்ற நாடுகளில் பருவமழை குறையும்போது, விவசாயம் பொய்த்து, அதனால் உழவர்கள் தற்காலிகமான ஏழ்மை நிலையில் உழல்கிறார்கள்.
  • அதே நிலையில் அவர்கள் நீண்டகாலமாக வாழும்போது அந்நிலையை முற்றிய வறுமை (அ) அமைப்பு சார்ந்த வறுமை என அழைக்கப்படுகிறது.

முதல்நிலை வறுமை மற்றும் இரண்டாம் நிலை வறுமை

  • முதல்நிலை வறுமை என்பது “குடும்பங்களில் வாழ்க்கை நடத்த மொத்த சம்பாத்தியங்களைக் கொண்டு குறைந்தபட்ச, அத்தியாவசிய, பொருள்களைக் கூட வாங்கமுடியாத, பற்றாக்குறையான நிலையை குறிக்கும்”.
  • இரண்டாம் நிலை வறுமை என்பது குடும்பங்களின் சம்பாத்தியம், வாழ்க்கை நடத்த போதுமானதாக இருக்கும்.
  • ஆனால் அதன் ஒரு பகுதியானது உபயோகமான (அ) உபயோகமற்ற செலவுகளுக்காக ஈர்க்கப்படும்.
  • குறிப்பாக மது அருந்துதல், சூதாட்டம் மற்றும் திறமையற்ற குடும்ப நிர்வாகம் போன்றவைகள் வீணாண செலவுகளுள் சிலவாகும்.

கிராமப்புற ஏழ்மை மற்றும் நகர்புற ஏழ்மை

  • கிராமங்களில் வாழும் பெரும்பான்மையான ஏழை மக்கள் நிலங்களை சொந்தமாக பெற்றிராமல், விவசாய தினக்கூலிகளாகவே வேலைச் செய்கிறார்கள். அவர்கள் கூலியும் மிக குறைவே, ஆண்டில் ஒரு சில மாதங்களே அவர்கள் வேலை வாய்ப்பைப் பெறுகின்றார்கள்.
  • ஆனால் நகர்புறங்களில் வாழும் ஏழை மக்கள் நீண்ட நேரம் உழைத்து, மிக குறைவான வருமானத்தையே பெறுகிறார்கள்.

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!