TNPSC GROUP – 2 MAINS (T)

TNPSC GROUP – 2 MAINS EXAM PREPARATION IN TAMIL

கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணை மற்றும் சீர்வேக ஏவுகணை வேறுபடுத்துக.

  (பாலிஸ்டிக் ஏவுகணை) கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை குரூஸ் ஏவுகண – சீர்வேக ஏவுகணை இது உந்துவிசை எறிபாதையில் ஒன்று (அ) அதற்கு மேற்பட்ட போர்கப்பலில் இருந்து முன்னரே தீர்மானிக்கப்பட்ட இலக்கை அடைகிறது.  இது ஒரு வழிகாட்டு ஏவுகணை, வளிமண்டலத்தில் அதன் விமான பாதையில் நிலையான வேகத்தில் பறக்கிறது இலக்கு முன்னரே தீர்மானிக்கப்பட்டது. பெரிய இலக்குகளுக்கு பொருத்தமானது. இலக்கு மாறக்கூடியது. மேலும் சிறிய மாறக்கூடிய இலக்குகளுக்கு பொருத்தமானது. ராக்கெட் எஞ்சின் போன்றது ஜெட் எஞ்சின் […]

கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணை மற்றும் சீர்வேக ஏவுகணை வேறுபடுத்துக. Read More »

நானோ தொழில்நுட்பத்தின் பயன்பாடுகள் யாவை?

நானோ தொழில்நுட்பத்தின் சில பயன்பாடுகள்:  மருந்து விநியோகம்: தளம் சார்ந்த மருந்து விநியோகத்திற்கு நானோ துகள்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த தொழில் நுட்பத்தில் தேவையான மருந்தின் அளவு பயன்படுத்தப்படுவதால், குறிப்பிட்ட நோயுற்ற பகுதியில் மட்டுமே செலுத்தப்படுவதாலும் பக்க விளைவுகள் கணிசமாக குறைக்கப்படுகிறது. செல்லை சரிசெய்தல்: நானோபாட்களை குறிப்பிட்ட நோய்க்கான செல்களை சரிசெய்ய திட்டமிட்டு இயற்கையான முறையில் உடலுக்கு ஏற்ற ஆன்டிபாடிகளுக்கு ஒத்தவாறு செயல்பட உதவுகிறது. திசுபொறியியல்: நானோ தொழில்நுட்பத்தின் உதவியுடன், சேதமடைந்த திசுக்களை உருவாக்கலாம் அல்லது சரிசெய்யலாம். இந்த

நானோ தொழில்நுட்பத்தின் பயன்பாடுகள் யாவை? Read More »

மனித இதயத்தின் அமைப்பு பற்றி விரிவாக எழுதுக.

மனித இதயத்தின் அமைப்பு இரத்த நாளங்கள் வழியாக இரத்தத்தை உந்தித் தள்ளும் தசையால் ஆன விசையியக்க உறுப்பு இதயம் ஆகும். மனித இதயம் நுரையீரலுக்கு இடையில், மார்புக்குழியில், உதரவிதானத்திற்கு மேலாக சற்று இடது புறம் சாய்ந்த நிலையில் காணப்படுகிறது. இதயம் கார்டியாக் தசை எனும் சிறப்புத் தசையால் ஆனது. உறை இதயம் இரண்டு அடுக்கினால் ஆன பெரிகார்டியல் உறையால் சூழப்பட்டுள்ளது. இவ்வடுக்கின் இடைவெளியில் நிரம்பியுள்ள பெரிகார்டியல் திரவம் இதய துடிப்பின் போது ஏற்படும் உராய்வு மற்றும் இயக்கத்தினால்

மனித இதயத்தின் அமைப்பு பற்றி விரிவாக எழுதுக. Read More »

ஜீன் சிகிச்சை பற்றி சிறு குறிப்பு தருக.

ஜீன் சிகிச்சை மனிதனில் குறைபாடுள்ள ஜீன்களுக்கு பதிலாக திருத்தப்பட்ட, செயல்படும் ஜீன்களை இடம் மாற்றி மரபு நோய்களையும், குறைபாடுகளையும் சரிசெய்வது ஜீன் சிகிச்சை எனப்படும்.  குறைபாடு நோய் உள்ள மனிதரின் ஜீன்கள் மறுசேர்க்கை டி.என்.ஏ தொழில்நுட்பத்திற்கு உட்படுத்தப்பட்டு திருத்தப்படுகின்றன.  இம்முறை 1990 ஆம் ஆண்டு வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டது. உடல செல்களில் திருத்தப்பட்ட ஜீன்கள் இடம் மாற்றப்படுதல் உடல செல் ஜீன் சிகிச்சை எனப்படும். கருநிலை அல்லது இனப்பெருக்க செல்களில் (விந்து மற்றும் அண்ட செல்) திருத்தப்பட்ட ஜீன்கள்

ஜீன் சிகிச்சை பற்றி சிறு குறிப்பு தருக. Read More »

புற்றுநோய் பற்றி விவரித்து எழுதுக.

புற்றுநோய் உலகளவில் ஆண்டு தோறும் 4 மில்லியன் மக்கள் புற்றுநோயின் காரணமாக இறக்கின்றனர்.  இந்தியாவில் ஒரு மில்லியனுக்கும் அதிகமானோர் புற்றுநோயின் பாதிப்பிற்கு உள்ளாகின்றனர்.  புற்றுநோய் என்ற சொல்லுக்கு இலத்தீன் மொழியில் ‘நண்டு’ என்று பொருள்.  புற்றுநோயைப் பற்றிய படிப்புக்கு “ஆன்காலஜி” (ஆன்கோ – கட்டி) என்று பெயர். கட்டுப்பாடற்ற, அபரிமிதமான செல் பிரிதல் புற்றுநோயாகும். இது அருகிலுள்ள திசுக்களுக்குள் ஊடுருவி, கட்டிகள் அல்லது நியோபிளாசத்தை (புதிய வளர்ச்சி) உருவாக்கி திசுக்களை அழிக்கிறது. இது வேறுபட்ட செல்களின் தொகுப்பாகும்.

புற்றுநோய் பற்றி விவரித்து எழுதுக. Read More »

மனித இரத்தம் பற்றி விரிவாக எழுதுக

இரத்தம் இரத்தம் சிவப்பு நிறம் கொண்ட திரவ இணைப்புத் திசுவாகும். மேலும் இது மனிதனின் உடல் சுற்றோட்டத்தின் முக்கிய ஊடகமாகும். இரத்தத்தின் பகுதிப் பொருள்கள் இரத்தம் இரண்டு முக்கிய பகுதிப் பொருட்களான பிளாஸ்மா எனும் திரவப் பகுதியையும் அதனுள் மிதக்கும் ஆக்கக் கூறுகளையும் (இரத்த செல்கள்) கொண்டுள்ளது. பிளாஸ்மா இரத்தத்தின் 55% பிளாஸ்மா ஆகும். இது சிறிதளவு காரத்தன்மை உடையது. உயிரற்ற செல் உட்பொருட்களைக் கொண்டுள்ளது. கரிமப் பொருட்களான புரதங்கள், குளுக்கோஸ், யூரியா, நொதிகள், ஹார்மோன்கள், தாது

மனித இரத்தம் பற்றி விரிவாக எழுதுக Read More »

லேசர் என்றால் என்ன? அதன் பயன்கள் சிலவற்றை குறிப்பிடுக.

லேசர் (LASER) என்பது Light Amplification by Stimulated Emission of Radiation என்பதன் சுருக்கமாகும். இது ஒரு ஒளிமிகைப்பி ஆகும், இது ஒளியை அதிகரிக்கப் பயன்படுகிறது. லேசர் ஒளியானது ஒரே அலைநீளம், ஒரே திசையில் மற்றும் ஒரே கட்டத்தில் இருக்கும் ஒளியாகும் லேசர் சாதாரண ஒளிமூலம் வெளிவிடும் ஒளி ஓரியல்பற்றது, ஏனெனில் வெவ்வேறு அணுக்கள் வெவ்வேறு கட்டங்களில் ஒளியை உமிழும். குறுக்கீட்டு விளைவிற்கு ஓரியல் மூலங்கள் மிக அவசியம். இரண்டு தனிப்பட்ட மூலங்கள் ஓரியல் மூலங்களாகச்

லேசர் என்றால் என்ன? அதன் பயன்கள் சிலவற்றை குறிப்பிடுக. Read More »

தொலைஉணரி (Remote Sensing) என்றால் என்ன?அதன் பயன்கள் யாவை?

தொலைஉணரி (Remote Sensing): தொலை உணரி என்பது ஒரு குறிப்பிட்ட இடத்தின் இயற்பியப் பண்புகளை கண்டுபிடிக்கவும் மற்றம் கண்காணிக்கவும் உதவும் ஒரு செயல்முறையாகும் தொலை உணர்வியின் பயன்கள்: விரும்பத்தக்க சூழலை நிர்ணயிக்கவும், நோய் பரவுதல் மற்றும் கட்டுப்படுத்துதல் முதலியவற்றை அறிய உதவுகிறது.  வனத்தீ மற்றும் சிற்றினப் பரவலை வரைபடமாக்கப் பயன்படுகிறது. மண்ணின் ஈரப்பதத்தை தீர்மானிக்க உதவுகிறது, பயிர் உற்பத்தியை மதிப்பிட முடியும். நகரப்பகுதி வளர்ச்சி மற்றும் வேளாண் நிலம் அல்லது காடுகளில் பல வருடங்களில் நிகழும் மாறுபாடுகளையும்

தொலைஉணரி (Remote Sensing) என்றால் என்ன?அதன் பயன்கள் யாவை? Read More »

ககன்யான் திட்டதின் நோக்கம் மற்றும் முக்கியத்துவம் என்ன?

ககன்யான் திட்டம் ககன்யான் (Gaganyaan விண்கலம்) இந்திய விண்கலத்தின் மூலம் பூமியின் தாழ் வட்டப்பாதைக்கு மனிதர்களை அனுப்பி, அவர்களை பாதுகாப்பாக மீண்டும் பூமிக்கு அழைத்து வருவது தான் இத்திட்டத்தின் நோக்கம் ஆகும்.  திட்டத்தின் பெயர் சமஸ்கிருதத்தில் “வானத்தை நோக்கிச் செல்லும்” என்று பொருள். இந்த விண்கலத்தில் மூன்று பேர் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் இந்த விண்கலமானது ஜி. எஸ். எல். வி மார்க் III மூலம் 2021 ஆம் ஆண்டில் விண்ணில்

ககன்யான் திட்டதின் நோக்கம் மற்றும் முக்கியத்துவம் என்ன? Read More »

உயிரியத்தீர்வு (Bioremediation) என்றால் என்ன? அதன் பல்வேறு வகைகளை விவரி.

உயிரியத்தீர்வு (Bioremediation): சூழல் மாசுறுதலை சுத்தம் செய்ய நுண்ணுயிர்கள் அல்லது தாவரங்களைப் பயன்படுத்துவது உயிரி வழித்திருத்தம் எனப்படுகிறது. கழிவுநீர், தொழிற்சாலை கழிவு, திடக்கழிவுகள் போன்றவற்றை உள்ளடக்கிய கழிவுகளை சரிசெய்ய இந்த அணுகுமுறை பயன்படுத்தப்படுகிறது. உயிரி வழித்திருத்தம் மண், நிலத்தடி நீர் ஆகியவற்றில் இருக்கும் எண்ணெய் கசிவு, பெட்ரோலிய வேதிய எச்சங்கள், பூச்சிக்கொல்லிகள் அல்லது வன் உலோகங்கள் போன்றவற்றை நீக்குகிறது. உயிரியத் திருத்த செயல்முறை மலிவானது மட்டுமின்றி சூழல் மாசுறாத ஒரு அணுகுமுறையாகும். குறைந்த செறிவில் காணப்படும் மாசுறுத்திகளை

உயிரியத்தீர்வு (Bioremediation) என்றால் என்ன? அதன் பல்வேறு வகைகளை விவரி. Read More »

error: Content is protected !!
Open chat
உதவிக்கு
TNPSC EXAM MACHINE TEST BATCH தொடர்பான தகவல் இங்கு அளிக்கப்படும். (PRELIMS + MAINS)