இணையவழியில் நெல் கொள்முதல் E-governance in the state

GROUP 2 MAINS
UNIT 2: Administration of union and State with special reference to Tamilnadu
TOPIC: Use of IT in administration – E-governance in the state

 

இணையவழியில் நெல் கொள்முதல்

  • விவசாயிகளின் நெல்லை கொள்முதல் செய்ய கொள்முதல் நிலையங்களிலேயே இணையவழியில் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் அறிவித்துள்ளது.
  • இணையவழியில் நெல் கொள்முதலை பதிவு செய்வதில் பல்வேறு சிக்கல்களை விவசாயிகள் எதிர்கொண்டதால் நுகர்பொருள் வாணிபக் கழகம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
  • அடங்கல் ஆவணம், ஆதார் நகல் உள்ளிட்ட ஆவணங்களை விவசாயிகள் அளித்தால், நெல் கொள்முதல் நிலையங்களிலேயே இணையவழியில் பதிவு செய்யப்பட்டு, டோக்கன் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • முன்னுரிமை அடிப்படையில், விவசாயிகளிடமிருந்து நெல்கொள்முதல் செய்யவும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் உத்தரவிட்டுள்ளது.
  • நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் உழவா்கள் பயன்பெறுவதை உறுதி செய்யும் வகையில் இணைய வழி பதிவு முறையை அக்டோபா் 1-ஆம் தேதி முதல் செயல்படுத்த வேண்டுமென மத்திய அரசு கேட்டுக் கொண்டது.
  • அதன்படி, தமிழகத்தில் உழவா்கள் தங்களது பெயா், ஆதாா் எண், புல எண், வங்கிக் கணக்கு எண் ஆகிய விவரங்களை எளிய முறையில் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத்தின் இணையதளங்களில் பதிவேற்றம் செய்ய கேட்டுக் கொள்ளப்பட்டது.
  • மேலும், கொள்முதல் செய்ய வேண்டிய நாளினைத் தெரிவித்து முன்பதிவு செய்து, நெல்லை விற்பனை செய்து பயன்பெறும்படியும் கேட்டுக் கொண்டது.
  • ஆனால், விவசாயிகளுக்கு நெல் கொள்முதல் செய்வதை இணையவழியில் முன்பதிவு செய்வது என்பது இயலாத காரியம் என்பதாலும், இணையவழியில் முன்பதிவு செய்தில் பல்வேறு சிக்கல்கள் நீடித்த நிலையில், அதனை எதிர்த்துப் போராட்டங்கள் நடத்தப்பட்டன நிலையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

#TNPSCGROUP2MAINS #TNPSCGROUP1MAINS #E-GOVERNANCE

Leave a Comment

Your email address will not be published.

error: Content is protected !!
Open chat
Hello Exam Machine Team. I Would Like To Join TNPSC Group 2 Test Batch.