EXAM MACHINE – GMAINS தினமும் பதிவிடும் கேள்விகளை எப்படி பயன்படுத்துவது??

 

 

EXAM MACHINE சார்பாக முதன்மைத் தேர்விற்கு தினமும் பயிற்சி செய்யும் விதத்தில் குறைந்த அளவிலான கேள்விகளை Syllabus படி பதிவிட்டு வருகின்றோம்.

கொடுக்கப்படும் கேள்விகளுக்கான விடைகள் REFERENCE புத்தகத்தில் அமைந்துள்ளது. அந்த REFERENCE புத்தகத்தை பயன்படுத்தி குறைந்தது 10 முதல் 15 முக்கிய KEY POINT தயார் செய்து வைத்துக் கொள்ளவும்.

வார இறுதியில் அந்த வாரம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான சிறிய அளவிலான தேர்வை நீங்களே எழுதி KEY POINT நினைவில் உள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ளவும்.

இதனை தொடர்ந்து செய்து வரும் பொழுது சில மாதங்களிலேயே கடினமான கேள்விகளுக்கும் பதில் அளிக்கும் திறனை எளிதில் பெற்று விடுவீர்கள்.

கேள்விகள் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுகிறது?

Exam Machine தினமும் வெளியிடும் ஒவ்வொரு கேள்விகளுமே Group 1 Mains பாடத் திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு ஒவ்வொரு தாள் மற்றும் ஒவ்வொரு தாளிலும் உள்ள UNIT வரிசைப்படி கேள்வித்தாளை வழங்குகின்றோம். இந்த கேள்விகள் தமிழ்நாடு அரசு பாடப் புத்தகம், முந்தைய ஆண்டு கேள்வித்தாள் (GROUP 1 Mains and UPSC mains ) போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்படுகின்றது.

எவ்வளவு நேரம் ஒதுக்க வேண்டும்?

நாம் வெளியிடும் கேள்விகளுக்கான விடைகளை தயார் செய்ய அதிகபட்சம் அரை மணி நேரம் மட்டுமே நீங்கள் ஒதுக்கவேண்டும்.

தொடக்கத்தில் கால அளவு சிறிது அதிகமாக இருந்தாலும் தொடர்ந்து பயிற்சி செய்யும் பொழுது அரை மணி நேரத்திற்கும் குறைவான நேரத்தில் உங்களால் Key Point தயார் செய்து கொள்ள முடியும்.

15 thoughts on “EXAM MACHINE – GMAINS தினமும் பதிவிடும் கேள்விகளை எப்படி பயன்படுத்துவது??”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!