மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் (MGNREGA) 2005 விவரி

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம்

  • வேலை செய்யும் உரிமை (Right to Work) உத்திரவாதம் அளிக்கும் ஒரு சமூக நடவடிக்கையாக அறிமுகப்படுத்தப்பட்டது.
  • கிராமப்புற இந்தியாவில் ஏழைகளின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த உள்ளூர் அரசாங்கம் குறைந்தபட்சம் 100 நாட்கள் ஊதியத்துடன் வேலை வாய்ப்பு வழங்க வேண்டும்.

முக்கிய நோக்கங்கள்:

  • திறன் சாராத பணியாளர்களுக்கு (Unskilled Labour) வருடத்திற்கு 100 நாட்களுக்கு குறையாத ஊதியத்துடன் கூடிய வேலைவாய்ப்பை வழங்குதல்.
  • கிராமப்புற ஏழைகளின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துதல்.
  • கிணறுகள், குளங்கள், சாலைகள் மற்றும் கால்வாய்களின் போன்ற கிராமப்புற உள்கட்டமைப்புகளை உருவாக்குதல்.
  • கிராமப்புறங்களில் இருந்து நகர்புற இடப்பெயர்வை குறைத்தல்.

சலுகை பெற தகுதிகள்:

  • இந்திய குடிமகனாக இருக்க வேண்டும்.
  • வேலை தேடுபவர் விண்ணப்பிக்கும் நேரத்தில் 18 வயதை பூர்த்தி செய்திருக்க வேண்டும்.
  • விண்ணப்பதாரர் உள்ளூர்வாசி ஆக இருக்க வேண்டும்.
  • விண்ணப்பம் சமர்ப்பித்து 15 நாட்களுக்குள்/ வேலை கோரப்பட்ட நாளிலிருந்து வேலைவாய்ப்பு வழங்க வேண்டும்.
  • இந்திய அரசின் ஊரக வளர்ச்சித்துறை (Department of rural development and panchayat raj) மற்றும் மாநில அரசும் இணைந்து இந்த திட்டத்தை செயல்படுத்துகிறது.
  • MGNREGA பணிகள் சமூக தணிக்கை (Social Audit) கட்டாயமாகும். இது பொறுப்பு மற்றும் வெளிப்படைத்தன்மைக்கு உதவுகிறது.

கிராம சபையின் பங்கு:

  • கிராமசபை கூட்டங்களில் உள்ளூர் தேவைகளை கருத்தில் கொண்டு பணிகள் முன்னுரிமை தீர்மானிக்கப்படுகின்றது.
  • கிராமசபை வேலைகளுக்கான விண்ணப்பங்களை பெற்று அதனை சரிபார்க்கிறது.
  • வேலை வாய்ப்பிற்கான அட்டைகளை வழங்குகின்றது.
  • மேலும் விண்ணப்பங்களை தேதியிட்ட ரசீதை வழங்குகின்றது.
  • விண்ணப்பம் பெற்ற பின்பு அவர்களுக்கான வேலை வாய்ப்பை ஒதுக்கீடு செய்கின்றது.

மாநில அரசின் பொறுப்புகள்:

  • மாநில வேலைவாய்ப்பு உத்தரவாத நிதியை (State Employment Guarantee Fund) நிறுவுகின்றது.

2 thoughts on “மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் (MGNREGA) 2005 விவரி”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!