இந்தியாவில் பொதுச் செலவு அதிகரிப்பதற்கான காரணங்களை வரிசைப்படுத்துக .

பொதுச் செலவு அதிகரிப்பதற்கான காரணங்கள்

  • தற்கால அரசு என்பது நலம் பேணும் அரசாகும். இதில் அரசானது சமூக,பொருளாதார மற்றும் அரசியல் சார்ந்த பணிகளை செய்துதர வேண்டியுள்ளது. 
  • இவைகள் பொதுச் செலவு அதிகரிப்பதற்கான காரணங்களாக உள்ளது.

மக்கள் தொகை வளர்ச்சி 

  • 67 ஆண்டு கால திட்டங்களில், இந்தியாவின் மக்கள்தொகை 1951–ல் 36.1 கோடியிலிருந்து 2011ல் 121 கோடியாக உயர்ந்துள்ளது. 
  • மக்கள்தொகை வளர்ச்சியினால் உடல்நலம், கல்வி, சட்டம் ஒழுங்கு போன்றவற்றிற்காக பேரளவு முதலீடு செய்ய வேண்டியிருக்கிறது. 
  • இளைஞர்களுக்கான கல்வி மற்றும் சேவைகளுக்காகவும், முதியோர்களுக்கான ஓய்வூதியம், சமூக பாதுகாப்பு மற்றும் உடல் நலத்திற்கான வசதிகள் ஏற்படுத்தவும் பொதுச்செலவு அதிகமாகிறது

பாதுகாப்புச் செலவு 

  • இந்தியாவில் பாதுகாப்பிற்கான செலவு அதிகரித்த வண்ணம் உள்ளது. இராணுவ தளவாடங்களை நவீனமயமாக்குவதால் இராணுவ செலவு பலமடங்கு அதிகரித்துள்ளது.
  • 1990 – 91-ல் 10,874 கோடியாக இருந்த அரசின் பாதுகாப்புச் செலவு 2018-19-ல் 2,95,511 கோடியாக அதிகரித்துள்ளது.

அரசு மானியங்கள் 

  • இந்திய அரசானது, உணவு, உரங்கள், முன்னுரிமை துறைக்கான கடன் வழங்கல், ஏற்றுமதி மற்றும் கல்வி போன்ற பல இனங்களுக்கு மானியங்களை வழங்குகிறது. 
  • மானியங்களுக்கான தொகை மிக அதிகமாக இருப்பதால் பொதுச் செலவு பலமடங்கு அதிகரித்துள்ளது. 
  • 1991-ம் ஆண்டில் மத்திய அரசின் மான்யத்திற்கான செலவு 9581 கோடியிலிருந்து 2,29,715.67 கோடியாக 2018–19ல் அதிகரித்துள்ளது. மற்றொரு புறம் பெரும் நிறுவனங்களுக்கு மானியமாக (ஊக்கத் தொகை) 5-இலட்சம் கோடிக்கு மேல் வழங்கியுள்ளது.

கடன் சேவைகள் 

  • அரசானது அதிகமான அளவில்உள்நாட்டு மற்றும் அயல்நாட்டு ஆதாரங்கள் மூலம் கடன் பெற்றுள்ளன. அதன் விளைவாக அரசு கடனை திருப்பி செலுத்துவதற்காக அதிகபணம் தேவைப்படுகிறது.
  • மத்திய அரசின் வட்டி செலுத்தல்களுக்கான தொகை 1990–91-ல் 21500 கோடியிலிருந்து 2018 – 19ல் 5,75,794கோடியாக அதிகரித்துள்ளது.

வளர்ச்சித் திட்டங்கள் 

  • அரசு பல்வேறு வளர்ச்சி திட்டங்களைமேற்கொள்கிறது. அவையாவன நீர்ப்பாசனம், இரும்பு மற்றும் எஃகு, கனரக எந்திரங்கள்,எரிசக்தி, தொலைதொடர்பு போன்றவையாகும்.இந்த வளர்ச்சித் திட்டங்கங்களுக்கு அதிகளவு முதலீடு தேவைப்படுகிறது

நகரமயமாக்கல் 

  • நகரங்களில் மக்கள் தொகை விரைவாக  அதிகரித்து வருகிறது. 1950–51-ல் மொத்தமக்கள் தொகையில் 17 சதவீதம் பேர் நகர்புறத்தில் வாழ்ந்தனர். 
  • தற்போது நகர மக்கள் தொகை 43% அளவிற்கு அதிகரித்துள்ளது. 
  • தற்போது 1 மில்லியன் மக்கள் தொகைக்கு மேல் சுமார் 54 நகரங்கள் உள்ளது. இதனால் சட்டம் ஒழுங்கை பராமரிப்பதற்கு, கல்வி மற்றும் குடிமை வசதிகைளை மேற்கொள்ள அதிக அளவில் செலவுகள் ஏற்படுகின்றது.

தொழில் மயமாக்கல் 

  • அடிப்படை மற்றும் கனரக தொழில்களுக்கு அதிக அளவு மூலதனம் தேவைப்படுகிறது. 
  • மேலும் இது உற்பத்திக்கு நீண்ட காலத்தையும் எடுத்துக்கொள்ளும். 
  • அரசானது இத்தகைய தொழிற்சாலைகளை திட்டமிட்ட பொருளாதராத்தில் துவங்க வேண்டியுள்ளது. 
  • மேலும் வளர்ச்சி குன்றிய நாடுகளில் போக்குவரத்து, தகவல் தொடர்பு, எரிசக்தி, எரிபொருள் போன்ற அடிப்படை வசதிகள் தேவைப்படுகிறது.

மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கான மானியங்கள் அதிகரிப்பு

  •  இயற்கை பேரழிவுகளை எதிர்கொள்வதற்கு மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கான வழங்கப்படும் மானியங்கள் உதவித்தொகை பெருமளவில் அதிகரித்துள்ளது. 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!