ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு திட்டம் (ICDP) பற்றியும் அதன் நோக்கங்களையும் குறிப்பிடுக.

ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு திட்டம் (ICDP)

 1. குழந்தைகளுக்கு துணை ஊட்டச்சத்து, நோய்த்தடுப்பு மற்றும் ஆரம்பக்கல்வி வழங்கும் திட்டம்.
 2. இது 1975 இல் தொடங்கப்பட்ட அரசாங்கத்தின் முதன்மை திட்டமாகும்.
 3. குழந்தையின் முழுமையான வளர்ச்சிக்கான சேவைகளின் ஒருங்கிணைந்த தொகுப்பு
 4. ஒன்றியத்தால் நிதியுதவி அளிக்கப்பட்டு மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களால் செயல்படுத்தப்படும் திட்டம்.
 5. நாட்டின் அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கியது.
 6. இத்திட்டத்திற்கு அங்கன்வாடி சேவைகள் என மறுபெயரிடப்பட்டுள்ளது.

நோக்கங்கள்

 1. குழந்தைகளின் ஊட்டச்சத்து மற்றும் சுகாதார நிலையை மேம்படுத்துதல் (0-6 ஆண்டுகள்)
 2. குழந்தையின் சரியான உளவியல், உடல் மற்றும் சமூக வளர்ச்சிக்கு அடித்தளம் அமைத்தல்
 3. இறப்பு, நோயுற்ற தன்மை, ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் பள்ளி இடைநிற்றலைக் குறைத்தல்.
 4. குழந்தைகளின் வளர்ச்சியை மேம்படுத்துவதற்காக பல்வேறு துறைகளிடையே கொள்கை மற்றும் செயல்பாட்டில் ஒருங்கிணைப்பை ஏற்படுத்துதல்.
 5. தரமான ஊட்டச்சத்து மற்றும் சுகாதாரம் சார்ந்த கல்வி மூலம் தாயின் திறனை மேம்படுத்தி அதன் மூலம் குழந்தையின் உடல் நலம் மற்றும் ஊட்டசத்துத் தேவைகளை கவனிக்கச் செய்தல்.
error: Content is protected !!
Open chat
Hello Exam Machine Team. I Would Like To Join TNPSC Group 2 Mains Test Batch.