தொலைஉணரி (Remote Sensing) என்றால் என்ன?அதன் பயன்கள் யாவை?

தொலைஉணரி (Remote Sensing):

தொலை உணரி என்பது ஒரு குறிப்பிட்ட இடத்தின் இயற்பியப் பண்புகளை கண்டுபிடிக்கவும் மற்றம் கண்காணிக்கவும் உதவும் ஒரு செயல்முறையாகும்

தொலை உணர்வியின் பயன்கள்:

  1. விரும்பத்தக்க சூழலை நிர்ணயிக்கவும், நோய் பரவுதல் மற்றும் கட்டுப்படுத்துதல் முதலியவற்றை அறிய உதவுகிறது.
  2. வனத்தீ மற்றும் சிற்றினப் பரவலை வரைபடமாக்கப் பயன்படுகிறது.
  3. மண்ணின் ஈரப்பதத்தை தீர்மானிக்க உதவுகிறது, பயிர் உற்பத்தியை மதிப்பிட முடியும்.
  4. நகரப்பகுதி வளர்ச்சி மற்றும் வேளாண் நிலம் அல்லது காடுகளில் பல வருடங்களில் நிகழும் மாறுபாடுகளையும் கண்காணிக்க உதவுகிறது.
  5. கடலடிமட்டம் மற்றும் அவற்றின் வளங்களையும் படமிடப் பயன்படுகிறது.
  6. இயற்கை வளங்களை காண உதவுகிறது.
  7. பனிப்பாறை உருகுதல் மற்றும் கடல் மட்டங்களில் ஏற்படும் பாதிப்புகளை பற்றி படிக்க உதவுகிறது.
  8. இராணுவ கண்காணிப்பிற்கு பயன்படுத்தலாம்.
error: Content is protected !!
Open chat
Hello Exam Machine Team. I Would Like To Join TNPSC Group 2 Mains Test Batch.