உயிரியத்தீர்வு (Bioremediation) என்றால் என்ன? அதன் பல்வேறு வகைகளை விவரி.

உயிரியத்தீர்வு (Bioremediation):

  • சூழல் மாசுறுதலை சுத்தம் செய்ய நுண்ணுயிர்கள் அல்லது தாவரங்களைப் பயன்படுத்துவது உயிரி வழித்திருத்தம் எனப்படுகிறது.
  • கழிவுநீர், தொழிற்சாலை கழிவு, திடக்கழிவுகள் போன்றவற்றை உள்ளடக்கிய கழிவுகளை சரிசெய்ய இந்த அணுகுமுறை பயன்படுத்தப்படுகிறது.
  • உயிரி வழித்திருத்தம் மண், நிலத்தடி நீர் ஆகியவற்றில் இருக்கும் எண்ணெய் கசிவு, பெட்ரோலிய வேதிய எச்சங்கள், பூச்சிக்கொல்லிகள் அல்லது வன் உலோகங்கள் போன்றவற்றை நீக்குகிறது.
  • உயிரியத் திருத்த செயல்முறை மலிவானது மட்டுமின்றி சூழல் மாசுறாத ஒரு அணுகுமுறையாகும். குறைந்த செறிவில் காணப்படும் மாசுறுத்திகளை அதிக திறனுடன் இது நீக்கிவிடும். மண் மற்றும் நீரில் பயன்படுத்தப்படும்

உயிரி வழித்திருத்த தொழில்நுட்பத்தின் வகைகள்:

தாவர வழித்திருத்தம் (Phytorermediation)

  • சூழல் மாசுறுத்திகளை தாவரங்களைப் பயன்படுத்தி திருத்தம் செய்தல்.

பூஞ்சை வழித்திருத்தம் (Mycoremediation)

  • பூஞ்சைகளைக் கொண்டு சூழல் மாசுறுத்திகளை திருத்தம் செய்தல்.

உயிரிவழி காற்றோட்டமளித்தல் (Bioventing)

  • இது ஆக்சிஜன் அல்லது காற்றோட்டத்தை அதிகரிக்கும் ஒரு செயலாகும்.
  • இதன் மூலம் சூழல் மாசுறுத்திகளின் சிதைவைத் துரிதப்படுத்தலாம்.

உயிரி வழி கரைத்து பிரித்தல் (Bioleaching)

  • மாசுறுத்தப்பட்ட இடங்களிலிருந்து கரைசல் உலோக மாசுறுத்திகளை (metal pollutant) கரைசல் நிலையில் நுண்ணியிரிகளைப் பயன்படுத்தி மீட்டல்.

உயிரி வழி பெருக்குதல் (Bioaugmentation)

  • ஒரு சில தேர்ந்தெடுக்கப்பட்ட நுண்ணியிர்களை சேர்ப்பதன் மூலம் சிதைவடையும் வேகத்தினை அதிகரிக்கச் செய்யும் செயல்முறை.

உரமாக்குதல் (Composting)

  • நுண்ணியரிகளைக் கொண்டு திட கழிவுகளை உரமாக மாற்றும் செயல்முறை.
  • இது தாவர வளர்ச்சிக்கு ஊட்டப்பொருளாக பயன்படும்.

வேர்ப்புல வடிகட்டல் (Rhizofiltration)

  • நுண்ணியிர்களைக் கொண்டு வேர்ப்புல (rhizosphere) உலோகங்களை உள்ளெடுத்தல் அல்லது கரிம சேர்மங்களை சிதைத்தல்.

வேர்ப்புல நுண்ணுயிரித் தூண்டல் (Rhizostimualtion)

  • தாவர வளர்ச்சியை வேர்ப்புல நுண்ணுயிரிகள் மூலம் தூண்டல்.
  • இது சிறந்த வளர்ச்சி சூழ்நிலைகளை கொடுப்பதன் மூலமாகவோ நச்சுப்பொருட்களை குறைப்பதனாலோ தூண்டப்படுகிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!