உள்ளடக்கிய கல்வி என்றால் என்ன?அதன் பயன்களை குறிப்பிடு

உள்ளடக்கிய கல்வி

  • உள்ளடக்கிய கல்வி என்பது மாணவர்களும் ஒரே வகுப்பில் சேர்ந்து கல்வி பயில்வதாகும். கற்றல் திறன் குறைபாடு உடையவர்கள், பல மொழி பேசுபவர்கள் பல்வேறு பண்பாடு கொண்டவர்கள் அனைவரும் ஒன்றாக கல்வி பயில்வதற்கு உள்ளடக்க கல்வி என்று பெயர்.

  • ஒருங்கிணைந்த கல்வியை விட இது பரந்த மற்றும் விரிவான கருத்துக்களை உள்ளடக்கியது.
  • உள்ளடங்கிய கல்வியில், சிறப்பு திட்டங்களான உள்கட்டமைப்பு, சிறப்பாக வடிவமைக்கப்பட்ட வகுப்பறைகள், சிறப்பு கலைத்திட்டங்கள் போன்றன இடம்பெற்றிருக்கின்றன.
  • சிறப்பு தேவை கொண்ட சில குழந்தைகள் அதே வகுப்பறையிலோ அல்லது வேறு வகுப்பிலோ அமர வைக்கலாம்.
  • உதாரணமாக, காது கேளாத குழந்தைகளுக்கு ஒலிக்கருவி அளித்து காது கேட்க வைப்பது.
  • கண்பார்வையற்ற குழந்தைகளுக்கு பிரெய்லி முறை அமைந்த புத்தகங்கள் வழங்குவது.

உள்ளடங்கிய கல்வியின் பயன்கள்

  • இக்கல்வி முறையானது, கற்றலை எளிதாக்கவும், வரவேற்கதக்கதாகவும், சமுதாயத்தில் அனைவரும் ஏற்றுக் கொள்ளக் கூடியதாகவும் பயனளிக்க கூடியதாகவும் உள்ளது.
  • எவ்வகையான கற்போரும் ஏற்றுக் கொள்ளும் வகையில் நெகிழ்வுத்தன்மை கொண்டதாக இக்கல்வி அமைப்பு உள்ளது.
  • ஏதோ ஒரு காரணத்தால் பள்ளியை விட்டு விலகிய மாணவர்கள் இயல்பான மாணவர்களுடன் சேர்ந்து கல்வி கற்கும் வாய்ப்பினை பெறுகின்றனர்.
  • இயலாமையுடைய குழந்தைகளும் கற்பதற்கு ஊக்குவிக்கப்படுகின்றனர்.
  • தங்களது தன்னம்பிக்கையையும் பிரச்சினைகளை எதிர்கொள்ளவும், சவால்களை எதிர்கொள்ளவும் சகமாணவர்களின் உதவியுடன் கற்கின்றனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!