தகவல் தொடர்பு சேவையின் தலைமுறைகள் பற்றி விவரி

தகவல் தொடர்பு சேவையின் தலைமுறைகள்

  • அலைபேசிக் கம்பியில்லாத் தகவல் தொடர்பு தொழில்நுட்பம், அதன் செயல்திறனை அடிப்படையாகக் கொண்டு பல்வேறு தலைமுறைகளாக வகைபடுத்தப்பட்டு, மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
  • ஒவ்வொரு தலைமுறையையும் மேம்படுத்தும் போது புதிய அதிர்வெண் பட்டைகள், உயர்ந்த தரவு வீதம், பரப்புகை மற்றும் செயல்படும் தொழில்நுட்பம் ஆகியவற்றின் அடிப்படையில் மேம்படுத்தப்படும்.

முதல் தலைமுறை – 1G

  • 10-15 வருடத்திற்கு முன்னர் பயன்பாட்டில் இருந்தது.
  • இணைய சேவைவுடன் குரலொலியை மட்டும் அனுப்பும் மற்றும் ஏற்கும்.
  • 1G சேவை முறையில் பயன்படுத்தப்பட்ட அலைபேசிகள் அளவில்
  • பெரியதாகவும், குறைந்த நேரம் செயல்பட்டாலும் அதிக அளவு மின்சக்தி தேவைப்படும் வகையிலும் வடிவமைக்கப்பட்டிருந்தது.

இரண்டாம் தலைமுறை – 2G

  • 2G தொழில்நுட்பமானது, ஒரே அலைவரிசையில் பல பயனாளிகளை ஒருங்கிணைத்து பயன்படுத்த அனுமதிக்கும்.
  • இதில் தரவு (SMS) மற்றும் குரலொலி ஆகிய இரண்டு சேவைகளையும் ஒருசேர பயன்படுத்த முடியும்.
  • தரவை மாற்றம் செய்வதற்கு முறையாக்க (Encrypton) தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டது.
  • இதற்கான அலைபேசி சாதனங்கள் GSM மற்றும் CDMA தொழில்நுட்பத்தில் செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தது.

மூன்றாம் தலைமுறை – 3G

  • 3G முறையில் GSM மட்டுமல்லாமல் CDMA மற்றும் UTMS – UMTS (Universal Mobile TeleCommunication) தொழில்நுட்ப முறையும் பயன்படுத்தப்படுகிறது.
  • இச்சேவை அறிமுகப்படுத்தப்பட்ட பொழுது 200 Kbps வரையுள்ள அதிக தரவு விகிதங்களை இடமாற்றம் செய்யப் பயன்படுத்தப்பட்டு வந்தது, பிற்பாடு வந்த செயல்முறைகள், ஒரு விநாடியில் பலதரப்பட்ட மெகாபிட் அளவு விகிதங்களை இடமாற்றம் செய்கிறது.
  • 3G பல்ஊடக சேவையில் நேரடி காணொளி ஒளிபரப்பும் செய்யப்படுவதால் சிறந்ததாகக் கருதப்படுகிறது.
  • UMTS ஆனது GSM மற்றும் EDGE லிருந்து முற்றிலும் மாறுபட்டது. 3G -ல் WCDMA (Wideband Code Division Multiple Access) நுழைவு முறையும் பயன்படுத்தப்படுகிறது.

நான்காம் தலைமுறை – 4G

  • 4G அலைபேசி இணையச் சேவையிலுள்ள அகலப்பட்டையை கொண்டு கம்பியில்லா பண்பேற்றிறக்கி (Wireless Modem) துணையுடன் திறன் மிகுந்த மடிக்கணினிகள் கூட இயக்கப்படுகிறது.
  • பல்வேறு தரவு அணுகல் சேவைகள், 4G-ன் வேகத்தை அதிகப்படுத்தவும். அதனைத் தக்கவைத்துக் கொள்ளவும் பயன்படுத்தப்படுகிறது.
  • இதற்கு உயர் வரையறை ஓட்டம் (High Definition Stream) துணை புரிகிறது. இணைந்த ரேடியோ இடை முகத்தின் (Radio Interface) மேம்படுத்திய பல வலையமைப்புகள் மூலம் குரல் மற்றும் தரவுத் தகவல்களுக்கு ஏற்ப அலைவரிசை பயன்படுத்தப்படுகிறது.
  • இது மேம்படுத்தப்பட்ட GSM மற்றும் CDMA வலையமைப்பின் அடிப்படை வழிமுறையாகும்.

ஐந்தாம்  தலைமுறை – 5G

 

  • இந்த சேவை நுகர்வோருக்கு மிக அதிக தரவு வேகத்தை வழங்கும்,
  • இதன் அலைவரிசையைத் திறம்பட பயன்படுத்த முடியும்
  • 5 வது தலைமுறை வலையமைப்பானது 5G-ன் NR (New Radio – புதிய வானொலி) என்றழைக்கப்படுகிறது. 
  • இது LTE உடன், நுண்ணலை அதிர்வெண்களை செயல்படுத்தும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.
  • இதுவரைப் பயன்படுத்தப்படாத 26 GHz முதல் 36 GHz வரையுள்ள, மிகவும் பரந்த அலைவரிசையுடைய பட்டை அகலங்கள் திறம்பட பயன்படுத்த முடியும். 
  • தகவமைப்பு ஏந்தேணி தொழில்நுட்பத்துடன், மிகவும் குறுகிய வானொலி கற்றைகளைக் (40 MHz வரை ஊர்தி அலையாக செயல்படுவன) குவிக்கும் RF கதிர்களை மையமாகக் கொண்டு, அலைபேசி இருப்பிடத் திசையை நோக்கித் தரவை அனுமதிக்கும்.
  • தொடக்கத்தில் 5G ஆனது ஒரே நேரத்தில் 4G உடன் இணைந்து செயல்படும். 
  • இதன் காரணமாக ஒரு அலைபேசி 4G மற்றும் 5G ஆகியவற்றிற்கான இணை இணைப்பாக ஒரு பொது நுழைவு (Access) வலையமைப்பைப் பராமரிக்கும்
  • இது EN-DC (Eutun/New Radio Dual Connectivity) வலையமைப்பு அணுகல் என அழைக்கப்படும்
  • 5G வானொலி 1 Gbps மற்றும் அதற்கு மேற்பட்ட தரவு வேகத்தை அனுமதிக்கும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!