தமிழக சட்ட மன்றத்தின் அமைப்பு மற்றும் அதன் தேர்தல் முறைகள் குறித்து விவரித்து எழுதுக.

மாநில சட்டமன்றம்

  • இந்தியாவில் மாநில சட்டமன்றம் என்பது ஆளுநரையும் ஒன்று அல்லது இரண்டு அவைகளையும் கொண்டிருக்கும். 
  • மேலவை என்பது சட்ட மன்ற மேலவை எனவும் கீழவை என்பது சட்டமன்றப் பேரவை எனவும் அழைக்கப்படுகிறது.

சட்டமன்ற மேலவை

  • ஒரு மாநிலத்தின் சட்டமன்ற மேலவையானது 40 உறுப்பினர்களுக்கு குறையாமலும், அம்மநில சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்கிற்கு மிகாமலும் இருத்தல் வேண்டும் என அரசியலமைப்புச் சட்டம் குறிப்பிடுகிறது. 

தேர்தல் முறை

  • இதன் உறுப்பினர்கள் மறைமுகமாக தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
  • மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர் மாவட்ட பஞ்சாயத்து மற்றும் நகராட்சி உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
  • மேலும் மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர்கள் சட்டமன்ற உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
  • 12 இல் ஒரு பங்கு உறுப்பினர்கள் பட்டதாரிகளால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்
  • ஆறில் ஒரு பங்கு உறுப்பினர்கள் மாநில ஆளுநரால் நியமிக்கப்படுகின்றனர்.

அமைப்பு

  • சட்டமன்ற மேலவை ஒரு நிலையான அவையாகும். 
  • இதன் உறுப்பினர்களில் மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர்கள் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஓய்வு பெறுவர். 
  • அக்காலி பணி இடங்களுக்கு தேர்தல் நடைபெறும். 
  • உறுப்பினர்களின் பதவிக்காலம் 6 ஆண்டுகள் ஆகும். 

தகுதிகள்

  • உறுப்பினராக தேர்ந்தெடுக்கப் படுவதற்கு ஒருவர் இந்திய குடிமகனாகவும், 30 வயது நிரம்பியவராகவும் இருத்தல் வேண்டும். 
  • இவர் மாநில சட்ட மன்றத்திலும் அல்லது பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் உறுப்பினராக இருத்தல் கூடாது. 

அவைத் தலைவர்

  • தலைமை அலுவலராக அவைத் தலைவர் இருப்பார். 
  • அவைத் தலைவர் இல்லாத போது துணைத்தலைவர் அவையை நடத்தும் பொறுப்பினை கொண்டிருப்பார். 
  • சட்டமன்ற மேலவையின் தலைவர் மற்றும் துணைத் தலைவரை அவையின் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கின்றனர்.
  • இந்தியாவில் தற்போது 6 மாநிலங்களில் மட்டும் சட்டமன்ற மேலவை நடைமுறையில் உள்ளது. 
  • அவை பீகார் ,உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா,கர்நாடகம், ஆந்திரபிரதேசம் மற்றும் தெலுங்கானா ஆகும்.

சட்டமன்றப் பேரவை

  • மாநில அரசாங்கத்தின் சட்டங்களை உருவாக்குபவர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் (MLA) என அழைக்கப்படுகின்றனர். 
  • இவர்கள் பல்வேறு சட்டமன்றத் தொகுதிகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். 
  • சட்டமன்ற தேர்தலுக்காக, மாநிலம் பல்வேறு தொகுதிகளாக பிரிக்கப்படுகின்றன. 
  • இவை சட்டமன்ற தொகுதிகள் என அழைக்கப்படுகின்றன. 
  • ஒரு சட்டமன்ற தொகுதி ஒரு லட்சம் அல்லது அதற்கு மேற்பட்ட மக்கள் தொகையை கொண்டிருக்கும். 
  • ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியில் இருந்தும் ஒரு உறுப்பினர் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.

சட்டமன்றப் பேரவைக்கான தேர்தல்

  • சட்டமன்றப் பேரவைக்கான தேர்தலில் பல்வேறு அரசியல் கட்சிகள் போட்டியிடுகின்றன. 
  • கட்சிகள் ஒவ்வொரு தொகுதிக்கும் தமது வேட்பாளர்களை நியமிக்கின்றன . தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் மக்களிடம் தமக்கு வாக்களிக்குமாறு கோருகிறார். 

தகுதிகள்

  • சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் ஒருவர் 25 வயதில் நிரம்பியவராக இருத்தல் வேண்டும். 
  • ஒருவர் ஒரே சமயத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட தொகுதிகளில் போட்டியிடலாம். 
  • எந்த கட்சியையும் சாராத ஒருவரும் தேர்தலில் போட்டியிடலாம். அவ்வாறு போட்டியிடும் வேட்பாளர் சுயேட்சை வேட்பாளர் என அழைக்கப்படுகிறார். 
  • ஒவ்வொரு கட்சியும் தனக்கென ஒரு சின்னத்தை கொண்டிருக்கும். சுயேட்சை வேட்பாளர்களுக்கும் சின்னம் வழங்கப்படும். 
  • சட்டமன்ற உறுப்பினர்கள் மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். 
  • ஒரு சட்டமன்ற தொகுதியில் வசிக்கும் 18 வயது நிரம்பிய அனைவரும் சட்டமன்ற தேர்தலில் வாக்களிக்கலாம்.

அமைப்பு

  • அரசியலமைப்பின்படி ஒரு மாநில சட்டமன்றத்தில் 500 உறுப்பினர்களுக்கு மேலாகவும் 60 உறுப்பினர்களுக்கு குறைவாகவும் இருத்தல் கூடாது.
  • அட்டவணை பிரிவினர், பழங்குடியினருக்கு சட்டமன்றத்தில் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. 
  • மாநில ஆளுநர் சட்டமன்றத்திற்கு ஒரு ஆங்கிலோ இந்திய உறுப்பினரை அவர்கள் நியமனம் செய்கிறார். 
  • சட்டமன்ற உறுப்பினர்கள் ஐந்து ஆண்டு காலத்திற்கு தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். 
  • ஆனால் மாநில ஆளுநர், சட்டமன்றத்தின் பதவிக்காலம் முடிவதற்கு முன்பாகவே அதனை கலைத்து புதிதாக தேர்தல் நடத்த அழைப்பு விடுக்கலாம். 
  • சட்டமன்றக் கூட்டத்திற்கு சபாநாயகர் இல்லாத நேர்வுகளில் துணை சபாநாயகர் சட்டமன்ற கூட்டத்திற்கு தலைமை ஏற்கிறார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!