பழங்குடியினருக்காக இயற்றப்பட்ட நலத்திட்டங்கள் பற்றி எழுதுக.

நலத்திட்டங்கள்:

  • பழங்குடியினர் துணைத் திட்டத்திற்கான சிறப்பு மைய நிதியுதவி.
  • ஷரத்து 275(1)ன் கீழ் மானியங்கள்.
  • அழிவின் விளிம்பிலுள்ள பண்டைய பழங்குடியின மக்களின் வளர்ச்சி பழங்குடியினர் உற்பத்தி பொருட்கள் விளைப்பொருட்கள் மேம்பாடு மற்றும் விற்பனைக்கான நிறுவன ஆதரவு.
  • பழங்குடியின மக்களின் நலனுக்காக பணியாற்றும் தன்னார்வ அமைப்புகளுக்கு மானிய உதவித் திட்டம்.
  • குறைவான கல்வியறிவு கொண்ட மாவட்டங்களில் பழங்குடியின பெண்களின் கல்வியை ஊக்குவித்தல்.
  • பழங்குடியினப் பகுதிகளில் தொழிற்பயிற்சி திட்டம்.
  • பழங்குடியின மாணவ மாணவிகளுக்கான விடுதிகள் திட்டம்.

உதவித்தொகை திட்டங்கள்:

  • உயர்நிலை கல்வி பயிலும் பழங்குடியின மாணவர்களுக்கான உதவித் தொகை (9-வது மற்றும் 10-வது வகுப்பு) ஊக்கத் மேல்நிலைக் கல்வி பயிலும் பழங்குடியின மாணவர்களுக்கான தொகை (11-ம் வகுப்பு முதல்)
  • பழங்குடியின மாணவர்களின் உயர்கல்விக்கான தேசிய அளவிலான உதவித்தொகை
  • பழங்குடியின மாணவர்கள் வெளிநாடுகளில் படிக்க உதவித்தொகை
  • பழங்குடியின ஆராய்ச்சி நிறுவனத்திற்கு ஆதரவு
  • சிறு வன உற்பத்திப் பொருட்களை குறைந்தபட்ச ஆதரவு விலை திட்டம் மூலம் விற்பனை செய்வதற்கான வழிமுறை (ம) அதற்கான மதிப்பினை உயர்த்தச் செய்தல்.
  • பழங்குடியினர் விவகாரங்கள் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தேசிய பழங்குடியினர் நிதி மற்றும் மேம்பாட்டு கழகம், வருமானம் ஈட்டும் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக பழங்குடியினருக்கு சலுகை வட்டி விகிதத்தில் நிதி உதவியை வழங்குகிறது.
  • குறிப்பிட்ட காலவரையறை கொண்ட கடன் திட்டம்
  • ஆதிவாசி மகிளா ஷக்தி கரண் யோஜனா
  • சுயஉதவிக் குழுக்களுக்கான சிறு கடன் திட்டம்
  • ஆதிவாசி சிக்ஷஷா ரின்ன் யோஜனா
  • வானபந்து கல்யாண் யோஜனா 2014
  • வனச்செல்வங்கள் திட்டம் 2018
  • ஆதி மஹோத்சவா திருவிழா – பழங்குடியின மக்களின் கைவினைப் பொருட்கள், கலாச்சாரம், உணவு வகைகள் மற்றும் வர்த்தகம் ஆகியவற்றை பெருக்கிட கொண்டாடப்படுகிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!