மக்கள்தொகை வளர்ச்சி என்றால் என்ன? மக்கள்தொகை வளர்ச்சியை கட்டுப்படுத்தும் வழிகள் யாவை?

மக்கள்தொகை வளர்ச்சி

  • மக்கள்தொகை வளர்ச்சி என்பது ஒரு குறிப்பிட்ட இடத்திலும் நேரத்திலும் வசிப்பவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதைக் குறிக்கிறது

தம்பதிகளின் பாதுகாப்பு வீதம் (Couple Protection Rate-CPR)

  • இந்த வீதத்தை அதிகரிப்பதினால், குடும்ப கட்டுப்பாட்டு முறைகளை கையாளும் தம்பதிகளின் விகிதம் அதிகரிக்க வேண்டும்.

குழந்தைகள் இறப்பு வீதம் (Infant Mortality Rate – IMR)

  • குழந்தைகள் இறப்பு வீதம் குறைக்கப்பட வேண்டும்.
  • ஏனெனில் குழந்தைகள் குறைந்த எண்ணிக்கையில் இறக்கும்போது, பொதுமக்கள் சிறு குடும்ப நெறியினை பின்பற்ற ஊக்கமளிக்கும்.

நாடு தொழில்மயமாதல்

  • நிலத்தை சார்ந்திருக்கும் மக்கள்தொகை அழுத்தத்தை குறைக்க வேண்டும்.
  • கிராமப் புறங்களில் குடிசை மற்றும் சிறு தொழில்களை, அதிகபட்ச மக்களுக்கு வேலை வாய்ப்பளிப்பதற்காக, வளரச் செய்தல் வேண்டும்.
  • இதன் வாயிலாக மக்களின் வாழ்க்கைத் தரம் உயரும்போது அது மக்கள் தொகையை கட்டுப்படுத்தும்.

பெண்களின் எழுத்தறிவு வீதம் மற்றும் கல்வியை அதிகரித்தல்

  • கல்வி கற்ற மக்கள் தங்களுடைய குடும்ப அளவினைப் பற்றி அதிக பொறுப்பு வாய்ந்த கண்ணோட்டத்தைப் பெற்றுள்ளனர். அவர்கள் சிறு குடும்பத்தின் நன்மைகளைப் பற்றியும், குடும்ப கட்டுப்பாட்டு முறைகளை பயன்படுத்துவதின் வாயிலாகவும் குடும்ப அளவினை குறைக்க முடியும் என்ற கருத்துக்களை புரிந்து கொண்டு செயல்படுவார்கள்.
  • இது பிறப்பு வீதத்தைக் குறைக்கும்.

காலம் தாழ்த்தி திருமணம் செய்தல்

  • காலம் தாழ்த்தி திருமணம் செய்வதற்கு ஊக்கமளிக்க வேண்டும்.
  • அதே நேரத்தில் முன்கூட்டியே திருமணம் செய்வதை கட்டாயம் கட்டுப்படுத்த வேண்டும்.
  • குறைந்தபட்ச ஆண்களின் திருமண வயது 21 மற்றும் பெண்களின் வயது 18 என்ற வயது வரம்பை வாழ்க்கையில் பின்பற்ற வேண்டும்.

சட்டரீதியான நடவடிக்கை

  • குழந்தைத் திருமணத்தையும் ஒரே சமயத்தில், ஒருவர் பல பெண்களை திருமணம் செய்துக் கொள்ளுதலையும் (polygamy) தடைசெய்ய சட்டங்களை இயற்றி அவற்றை அமுலுக்குக் கொண்டு வரவேண்டும்.

குடும்ப நல திட்டங்கள் (Family Planning)

  • குடும்ப நலத்திட்டமிடுதல் என்பது குடும்பத்தின் அளவைக் கட்டுப்படுத்தலாகும்.
  • இத்திட்டம் ஒரு தேசிய இயக்கமாக உருவெடுக்க வேண்டும்.
  • குடும்ப நலத்திட்டத்தைப் பற்றிய கல்வியை அனைவரும் பெறச் செய்தல் வேண்டும்.
  • பிறப்பைக் கட்டுப்படுத்தும், வெவ்வேறு வழிமுறைகளை பொதுமக்கள் அறியச் செய்தல் வேண்டும்.

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!