மக்கள்தொகை வெடிப்பு என்றால் என்ன? மக்கள்தொகை வெடிப்பு எவ்வாறு பொருளாதார வளர்ச்சியை தடை செய்கிறது?

மக்கள்தொகை வெடிப்பு

  • மக்கள்தொகை வெடிப்பு என்பது மக்கள் தொகை வளர்ச்சியில் திடீர் எழுச்சி ஆகும்.
  • இந்த செயல்முறை முக்கியமாக இறப்பு குறைவு மற்றும் உலகின் வளரும் நாடுகளில் கருவுறுதல் அதிகரிப்பதன் காரணமாகும்.

பொருளாதார வளர்ச்சி பாதிப்புகள்

உணவுப் பற்றாக்குறை

  • இந்திய மக்கள் தொகை அதிகரித்துக் கொண்டே இருப்பதால், அதற்கேற்ற விவசாய உற்பத்தியில் சமவிகித வளர்ச்சி இல்லையெனில் கடுமையான உணவுப் பற்றாக்குறை பிரச்சினையை சந்திக்க வேண்டி நேரிடும்.

உற்பத்தி செய்யாத நுகர்வோர் சுமை

  • மக்கள்தொகை எவ்வளவு அதிகரிக்கிறதோ, குழந்தைகளும், முதியோரின் எண்ணிக்கையும் அவ்வளவாக உயர்கிறது.
  • குழந்தைகளும் முதியோரும் உற்பத்தியில் ஒரு பங்கினையும் வகிக்காமல், பொருள்களை மட்டும் நுகர்கிறார்கள்.
  • இவ்வாறாக குழந்தைகள் மற்றும் முதியோரின் எண்ணிக்கை அதிகரிக்கும்போது சத்துணவு, மருத்துவ வசதி, பொது சுகாதாரம் மற்றும் கல்விப் போன்ற அடிப்படை தேவைகள் கவனம் செலுத்தப்படாமலேயே பெருமளவில் கிடக்கின்றன.

தலா வருமானம் மற்றும் நாட்டு வருமானம் குறைதல்

  • அதிகவேகமாக வளரும் மக்கள்தொகை தலா வருமானம் மற்றும் நாட்டு வருமானத்தின் சராசரி வளர்ச்சி வீதத்தை தடைச் செய்கிறது.

சேமிப்பும் முதலீடும் குறைதல்

  • அதிவேக மக்கள்தொகை வளர்ச்சி சேமிப்பையும் மற்றும் முதலீட்டின் திறனையும் குறைக்கிறது என்பது மிக ஆபத்தான விளைவாகும்.
  • நாட்டு வருமானம் மற்றும் தலா வருமானம் இந்தியாவில் குறைவாக உள்ள இந்நிலையில் சேமிப்பிற்கு என்று பணத்தை ஒதுக்க வாய்ப்பில்லை.

மூலதன ஆக்கம் குறைவு

  • நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு இன்றியமையாதது மூலதன ஆக்கம் ஆகும்.
  • அதிலும் இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகளுக்கு மூலதன ஆக்கம் மிக மிக முக்கியம். மூலதன ஆக்கம், சேமிப்பு மற்றும் முதலீட்டை சார்ந்துள்ளது.

வேலையின்மை

  • வளரும் மக்கள் தொகை வேலையில்லா திண்டாட்டத்தை மேலும் அதிகரிக்கிறது.

மகளிரின் உழைப்பு வீணாதல்

  • அடிக்கடி குழந்தை பெறுவதால், நீண்ட காலத்தில், உற்பத்தி நடவடிக்கைகளில் பெருமளவு மகளிரால் வேலை செய்ய இயலவில்லை.
  • இதனால் மனிதவளம் வீணாகிறது. மேலும் பொருளாதார வளர்ச்சிக் குன்றுகிறது.

உழைப்பின் உற்பத்தித்திறன் குறைவு

  • மக்கள்தொகை பெருக்கமானது நாட்டு வருமானம் மற்றும் தனி நபர் வருமானத்தை பெருமளவில் பாதிக்கின்றது.
  • இதன் காரணமாக மக்களின் வாழ்க்கைத் தரமானது குறைகிறது. இது உற்பத்தித் திறனை குறையச் செய்கிறது.

சமூக நல திட்டத்தின் மீது அதிக செலவு

  • மக்கள்தொகை அதிகரிப்பானது, குழந்தைகளின் எண்ணிக்கையை அதிகரிக்கிறது. இதன் காரணமாக மருத்துவ பராமரிப்பு, பொது சுகாதாரம், குடும்ப நலன், கல்வி, வீட்டுவசதி போன்ற சமூக செலவுகளின் தேவையானது அதிகரிக்கிறது.

வேளாண்மையில் பின்தங்கிய நிலை

  • ஐந்தாண்டு திட்டங்கள் மூலமாக வேளாண்மையில் பல வெற்றிகரமான முன்னேற்றங்களை செய்திருந்தாலும் விவசாய உற்பத்தியானது, மக்கள்தொகை வளர்ச்சியோடு ஒப்பிடும்போது மிக குறைவான நிலையிலேயே இருந்து வருகிறது.

வளர்ச்சியற்ற தொழில்நிலைகள்

  • மக்கள்தொகை வளர்ச்சி வேகம், தொழில் துறை வளர்ச்சியை அதிகமாக பாதிக்கின்றது.

அரசு மீது நிதிச் சுமை

  • அதிவேக மக்கள்தொகை அதிகரிப்பு, நிதிச் சுமையாக அரசுக்கு அமைகிறது. சமூக நலத் திட்டங்களுக்காகவும், வறுமையை அகற்றுவதற்காகவும் வளங்களைத் திரட்டி வறுமையை அகற்றுவதற்கு நிதியாக்கம் செய்ய வேண்டியுள்ளது.
  • தூய்மையான குடிநீர் வழங்குவதற்கும், குடியிருப்பு வசதி ஏற்படுத்தி தருவதற்கும் நல்ல சுகாதார சூழ்நிலையை உருவாக்குவதற்கும், மருத்துவ வசதி செய்துதருவதற்கும் மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தவும் பெரும் பொருள் செலவை அரசு மேற்கொள்ள வேண்டியுள்ளது.

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!