மண்டலக் குழுக்கள் என்றால் என்ன? கூட்டாட்சி முறையை அவைகள் எவ்வாறு வளர்க்கின்றன?

மண்டல குழுக்கள்

  • மண்டல குழுக்கள் மாநிலங்களில் மறுசீரமைப்புக் குழு 1956 ம் ஆண்டு சட்டத்தின் மூலம் தோற்றுவிக்கப்பட்டன.
  • மொழிவாரியாக மாநிலங்கள் உருவான போது மண்டல குழுக்களும் உருவாயின. 
  • சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமரான ஜவகர்லால் நேரு மண்டல குழுக்களின் நோக்கம் கூட்டுறவு கூட்டாட்சி வழக்கத்தை வளர்ப்பது என்றார்.
  • ஆரம்பத்தில் ஐந்து மண்டலம் குழுக்கள் தோற்றுவிக்கப்பட்டன. 
  • 1973ம் ஆண்டு வடகிழக்கு மாநிலங்களுக்கு சிறப்பு மண்டல குழு உருவாக்கப்பட்டது. 
  • தற்பொழுது ஆறு மண்டல குழுக்கள் இயங்குகின்றன.
  1. வடக்கு மண்டல குழு
  2. தெற்கு மண்டல குழு
  3. கிழக்கு மண்டல குழு
  4. மேற்கு மண்டல குழு
  5. மத்திய மண்டல குழு
  6. வட கிழக்கு மண்டல குழு
  • மத்திய உள்துறை அமைச்சர் எல்லா மண்டல குழுக்களின் பொது தலைவராக உள்ளார். 
  • மேலும் ஒவ்வொரு மண்டல குழுவிலும் ஒவ்வொரு மாநிலத்தின் முதல்வர் மற்றும் இரண்டு அமைச்சர்களும் ஒன்றிய ஆளுகைக்கு உட்பட்ட பகுதியில் நிர்வாக தலைவரும் உறுப்பினராக இருப்பார்கள்.
  • மண்டலங்களில் உள்ள மாநிலங்களில் இடையே எவ்வாறு ஒத்துழைப்பை உருவாக்கி வளர்ப்பது என்று மண்டல குழுக்கள் பரிந்துரை வழங்கும். 
  • பொருளாதார ,சமூக திட்டமிடல், எல்லைப் பிரச்சினைகள், போக்குவரத்து போன்ற துறைகளில் பரஸ்பர ஒத்துழைப்பு வழங்க மண்டல குழுக்கள் செயல்படும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!