முதல்வரின் காலை உணவு திட்டம் பற்றி விவரித்து எழுதுக

  • தமிழ்நாடு அரசின் “முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்” என்பது, தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் பயிலும் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு காலை உணவை இலவசமாக வழங்கும் ஒரு திட்டமாகும்
  • முதல்வரின் காலை உணவு திட்டம் அண்ணா பிறந்தநாளான நேற்று (செப்15-ம் தேதி) செயல்வடிவம் பெற்றது.
  • “நகரப் பகுதிகளிலும் கிராமப்பகுதிகளிலும் பள்ளிக்கு செல்லக்கூடிய குழந்தைகள் காலையிலேயே புறப்பட்டு விடுவதால், பெரும்பாலான குழந்தைகள் காலை உணவு சாப்பிடுவது இல்லை என்ற தகவல் அரசுக்கு கிடைத்திருக்கிறது. 
  • பள்ளிகள் மிக தூரமாக இருப்பது மட்டுமல்லாமல், சிலது குடும்ப சூழலும் இதற்கு காரணமாக இருக்கிறது. இதை மனதில் கொண்டு, அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை நேரத்தில் சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை தமிழக அரசு தொடங்கியுள்ளது. 
  • முதல்கட்டமாக சில மாநகராட்சி, நகராட்சிகளிலும், தொலைதூர கிராமங்களிலும் இத்திட்டம் தொடங்கப்படும். 
  • 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை பயிலக்கூடிய தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு அனைத்துப் பள்ளி நாட்களிலும் காலை வேளையில் சத்தான சிற்றுண்டி வழங்கப்படும்.

திட்டத்தின் முக்கிய குறிக்கோள்

  • மாணவ, மாணவிகள் பசியின்றி பள்ளிக்கு வருதல், ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்படாமல் இருத்தல், ஊட்டச்சத்து நிலையை உயர்த்துதல், பள்ளிகளில் மாணவர்கள் வருகையை அதிகரித்தல், வேலைக்கு செல்லும் தாய்மார்களின் பணிச்சுமையை குறைத்தல் ஆகியவற்றை முக்கிய குறிக்கோளாகக் கொண்டு முதல்வரின் காலை உணவு திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

உணவுகள்

  • அதன்படி, திங்கள், வியாழன் ஆகிய 2 நாட்களிலும் அரிசி உப்புமா, ரவா உப்புமா, சேமியா உப்புமா, கோதுமை ரவா உப்புமா வகைகளில் ஏதேனும் ஒன்றுடன் காய்கறி சாம்பார், செவ்வாய், வெள்ளி ஆகிய 2 நாட்களிலும் ரவா கிச்சடி, சேமியா கிச்சடி, சோள காய்கறி கிச்சடி கோதுமை ரவா கிச்சடி என கிச்சடி வகைகளில் ஒன்றும், புதன்கிழமை வெண்பொங்கல் அல்லது ரவா பொங்கலுடன் காயகறி சாம்பார் வழங்கப்படும். வெள்ளிக்கிழமை மட்டும் ரவா கேசரி அல்லது சேமியா கேசரி வழங்கப்படும்.

தாக்கங்கள்

  • பள்ளிக்கல்வியை மேலும் பரவலாக்குவது 
  • கற்றலை இனிமையாக்குவது.
  • மாணவர்களின் ஊட்டச்சத்து நிலையை மேம்படுத்துகிறது. காலை உணவு என்பது ஒரு நாளின் மிக முக்கியமான உணவாகும். இது மாணவர்களின் வளர்ச்சி மற்றும் கற்றலுக்குத் தேவையான ஆற்றல் மற்றும் ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது.
  • இந்தத் திட்டம் மூலம், ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  • மாணவர்களின் பள்ளி வருகையை அதிகரிக்கிறது. பசியின் காரணமாக பள்ளிக்கு வராமல் இருக்கும் மாணவர்களின் எண்ணிக்கை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  • வேலைக்குச் செல்லும் தாய்மார்களின் பணிச்சுமையை குறைக்கிறது. மாணவர்களுக்கு காலை உணவு வழங்குவதன் மூலம், வேலைக்குச் செல்லும் தாய்மார்களின் பணிச்சுமையை குறைக்க முடியும்.

சிறப்பாக செயல்படுத்த குழுக்கள்

  • முதல்வரின் காலை உணவு திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த ஊாக வளர்ச்சித் துறை நகர்ப்புற நிர்வாகம், தமிழ்நாடு மகளிர் மேப்பாட்டு நிறுவனம், பள்ளிக்கல்வி துறை  ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் மற்றும் உணவு பாதுனப்புத் துறை ஆகிய துறைகளின் அலுவலர்களை கொண்ட மாநில, மாவட்ட மற்றும் பள்ளி அளவிலான கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு, இத்திட்டம் கண்காணிக்கப்படுகிறது.

நாட்டுக்கே முன்னோடியாக, கல்வியுடன், காலை உலாவும் வழங்கும் விதமாக தமிழகத்தில் தொடங்கப்பட்டுள்ள இந்த சாதனை திட்டத்தை மற்ற மாநிலங்களும் பின்பற்றும் நாள் வெகுதொலைவில் இல்லை!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!