அன்னிபெசண்ட்

  • பிரிட்டனில் இருந்த போது அயர்லாந்தின் தன்னாட்சி இயக்கம், ஃபேபியன் சோஷலிசவாதிகள், குடும்பக் கட்டுப்பாட்டு இயக்கங்கள் ஆகியவற்றில் தீவிரப்  பங்காற்றியவர்அன்னிபெசண்ட்.
  • 1893ல் பிரம்ம ஞான சபையின் (தியாசாபிகல் சொசைட்டி) உறுப்பினராக இந்தியாவுக்கு வந்தவர்அன்னிபெசண்ட்.
  • பனாரஸில் (வாரணாசி) மத்திய இந்துக்  கல்லூரியை  நிறுவியவர் – அன்னிபெசண்ட்.
  • 1916ஆம் ஆண்டு பனாரஸ்(வாரணாசி) மத்திய இந்துக் கல்லூரியை பல்கலைக்கழகமாக மேம்படுத்தியவர் – பண்டித மதன் மோகன் மாளவியா.
  • 1907ல் எச்.எஸ்.ஆல்காட் மறைவுக்குப் பிறகு பிரம்ம ஞான சபையின் உலக அளவிலான தலைவராக பதவி வகித்தவர் – அன்னிபெசண்ட்.
  • பிரம்ம ஞான சபையின் தலைமையகம் – சென்னை அடையாறு.
  • அன்னிபெசண்ட் அம்மையாரின் ஆதரவாளர்கள்ஜம்னா தாஸ், துவாரகா தாஸ், ஜார்ஜ் அருண்டேல், ஷங்கர் லால் பன்கர், இந்துலால் யக்னிக், சி.பி. இராமசாமி, பி.பி. வாடியா.
  • துருக்கி சுல்தான் முதல் உலகப் போரில் நுழைந்ததை அடுத்து முஸ்லீம் லீக்கை பிரிட்டிஷார்  சந்தேகக் கண் கொண்டு பார்த்தனர்.
  • அயர்லாந்தின் தன்னாட்சி இயக்கத்தில் அன்னிபெசண்ட் பிரிட்டனில் இருந்த போது தீவிரப் பங்காற்றினார்.
  • 1914ல் தி காமன் வீல் என்ற வாரந்திரியை தொடங்கியவர்அன்னிபெசண்ட்.
  • அன்னிபெசண்ட் தொடங்கிய தி காமன் வீல் வாராந்திரி சமய சுதந்திரம், தேசியக் கல்வி, சமூக மற்றும் பொருளாதார சீர்திருத்தங்கள் ஆகியவற்றில் கவனம் செலுத்தியது.
  • 1915ல் “How India Wrought for Freedom” என்ற தலைப்பிலான புத்தகத்தைப் பதிப்பித்தவர்அன்னிபெசண்ட்.
  • அன்னிபெசண்ட் கடந்த காலத்தில் ஆழமாக வேரூன்றிய தேசிய விழிப்புணர்வின் தொடக்கங்களை How India Wrought for Freedom புத்தகத்தில் விரிவாக எடுத்துரைத்தார்.
  • ஜூலை14, 1915ல் நியூ இந்தியா என்ற தினசரியைத் தொடங்கியவர் – அன்னிபெசண்ட்.
  • தன்னாட்சி என்பது நாட்டில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட சபைகள் மூலமாகவும் அவர்கள் சபைக்கு கடமைப்பட்டவர்களாகவும் விளங்க நடைபெறும் ஆட்சியாகும்” என அன்னிபெசண்ட் கூறினார்.
  • இங்கிலாந்தின் கடினமான தருணம் இந்தியாவின் வாய்ப்புக்கான தருணம்” என்று முழக்கமிட்டவர் – அன்னிபெசண்ட்.
  • செப்டம்பர் 28, 1915ல் அயர்லாந்தின் தன்னாட்சி இயக்கத்தின் அடிப்படையில் இந்தியாவில் தன்னாட்சி இயக்கத்தை துவக்கப் போவதாக அன்னிபெசண்ட் முறைப்படி அறிவித்தார்.
  • 1916ல் இரண்டு தன்னாட்சி இயக்கங்கள் ஆரம்பிக்கப்பட்டன, ஆரம்பித்தவர்கள் – திலகர், அன்னிபெசண்ட்.
  • தன்னாட்சி இயக்கத்தின் குறிக்கோள்கள்
  • அன்னிபெசண்ட் தன்னாட்சி இயக்கத்துக்கு இந்தியாவின் எஞ்சிய அனைத்துப் பகுதிகளும் ஒதுக்கப்பட்டன.
  • அன்னிபெசண்ட் தொடங்கிய பத்திரிக்கைகளும் கல்லூரிகளும்
    • தி காமன் வீல் –     1914
    • நியூ இந்தியா –    ஜூலை 14, 1915
    • How India Wrought for Freedom –        1915
    • இந்துப் பல்கலைக்கழகம் –      1916
    • பிரம்ம ஞான சபை –      ஆல்காட்
    • மத்திய இந்துக் கல்லூரி –      அன்னிபெசண்ட்
    • இந்துப் பல்கலைக்கழகம்         –   மதன் மோகன் மாளவியா
    • அன்னிபெசண்ட் பிரிட்டனில் இருந்தபோது தீவிரமாக பங்காற்றிய இயக்கங்கள்
    • அயர்லாந்தின் தன்னாட்சி இயக்கம்
    • ஃபேபியன் சோஷலிசவாதிகள் இயக்கம்
    • குடும்பக் கட்டுப்பாட்டு இயக்கம்

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!