சம்பரான் இயக்கம், அகமதாபாத், கேதா போராட்டம்

சம்பரான் இயக்கம் – 1917

  • காந்தியடிகள் இந்திய மக்களை ஒன்றிணைக்கும் முதல் முயற்சியைக் பீகாரின் சம்பரானில் இருந்த கருநீலச்சாய (இண்டிகோ) விவசாயிகளின் வேண்டுகோளை ஏற்று மேற்கொண்டார்.
  • சம்பரானில், விவசாயிகள் 3/20 பங்கு நிலத்தில் கருநீலச்சாயத்தைக் கட்டாயம் விளைவிக்க வேண்டும் என்று கட்டாயபடுத்தப்பட்டனர்.
  • காந்தியடிகள் ஆச்சார்ய கிருபாளினி, ராஜேந்திர பிரசாத், மஹாதேவ் தேசாய், மஜாருல் ஹக், போன்ற உள்ளூர் தலைவர்களுடன் விரிவான விசாரணை மேற்கொண்டார்.
  • காந்தியடிகளையும் ஒரு உறுப்பினராகக் கொண்டு விசாரணைக் குழு ஒன்று அமைக்கப்பட்டது.
  • காந்தியடிகளுக்கு விவசாயிகளின் நிலைமையை நெருக்கமாகப் புரிந்து கொள்ள சம்பரான் போராட்டம் வழிவகை செய்தது.

அகமதாபாத்தில் ஆலைத் தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் மற்றும் உண்ணாவிரதம்

  • அகமதாபாத் ஆலை பணியாளர்களுக்கு 35 சதவீதம் ஊதிய உயர்வு கோரி காந்தியடிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் இறங்கினார்.

 கேதா போராட்டம் – 1918

  • கேதா மாவட்ட விவசாயிகள் பிளேக் நோயாலும் பஞ்சத்தாலும் சிரமத்தைச் சந்தித்தனர்.
  • 1918ல் நில வருவாய் வசூலை ரத்து செய்யுமாறு காலனி ஆட்சி நிர்வாகத்திடம் விவசாயிகள் கோரினர்.
  • அரசின் பஞ்சகால விதியின்படி, பயிர் சாகுபடி சராசரியாக 25 சதவீதத்துக்கும் குறைவாக இருந்தால் பயிரிடுவோர் முழு நிலவரி ரத்துக்கு தகுதிபெறுவர்.
  • ஆனால் நிர்வாகத்தினர் இவ்விதியை அமல்படுத்த மறுத்துவிட்டு முழுமையாக பணத்தைச் செலுத்துமாறு துன்புறுத்தினர்.
  • காந்தியடிகள் உறுப்பினராக அங்கம் வகித்த இந்தியப் பணியாளர் சங்கத்தை(Servants of India Society) உதவி கோரி விவசாயிகள் அணுகினர்.
  • காந்தியடிகள் ஏழை விவசாயிகள் சார்பாக விதல்பாய் பட்டேலுடன் இணைந்து தலையிட்டு சாகும் வரைப் போராட்டம் நடத்துமாறு அறிவுறுத்தினார்.
  • கேதா இயக்கத்தில் காந்தியடிகளுடன் விதல்பாய் பட்டேலும் இளம் வழக்கறிஞரான வல்லபாய் பட்டேலும் இந்துலால் நாயக்கும் இணைந்து விவசாயிகளுக்கு போராடினர்.
  • காந்தியடிகள் தன்னை ஒடுக்கப்ட்டவர்களின் தலைவராகவும் அதே நேரத்தில் ஒடுக்கும் நபர்களுடனும் பேச்சு வார்த்தை நடத்தும் தலைவராகவும் கேதா இயக்கத்தில் மூலம் நிலை நிறுத்திக் கொண்டார்.

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!