தொடக்ககால தேசியவாதிகளின் காலம் – 1885-1915

  • தொடக்ககால தேசியவாதிகளின் காலம் – 1885-1915.
  • தொடக்க கால தேசிய தலைவர்கள் சமூகத்தின் உயர் குடிப் பிரிவைச் சேர்ந்தோர் ஆவர்.
  • இத்தலைவர்கள் அரசியல் சட்டம் அனுமதித்த வழிகளான மனுகொடுப்பது, மன்றாடுவது, விண்ணப்பம் செய்வது போன்ற முறைகளை மேற்கொண்டதால் “மிதவாத தேசியவாதிகள்” என்னும் புனைப் பெயரை பெற்றனர்.
  • நாம் ஒரே நாடாக என்ற கருத்து வடிவம் பெற உதவியவர்கள் தொடக்க கால தேசியவாதிகள்.
  • மிதவாத தேசியவாதிகள் உண்மையாகவே இம்மண் சாரந்த காலனிய எதிர்ப்புச் சித்தாந்தத்தையும் தாங்களாகவே தங்களுக்கான ஒரு செயல் திட்டத்தையும் உருவாக்கிக் கொண்டனர்.
  • The Medicant Policy – ‘இறைஞ்சுதல் கொள்கை’க்கு உரியவர்கள் – மிதவாத தேசியவாதிகள்.
  • தீவிர தேசியவாதிகள்” என்று அழைக்கப்பட்டவர்கள் – பிபின் சந்திர பால், பாலகங்காதர திலகர், லாலா லஜபதி ராய்.
  • இந்திய தேசிய காங்கிரஸ் உருவாக்கப்பட்ட போது அதன் உறுப்பினர்களின் மூன்றில் ஒரு பகுதியனராக இருந்தவர்கள் – பத்திரிகையாளர்கள்.
  • இந்தியாவின் குரல் (Voice of India) மற்றும் ராஸ்த் கோப்தார் (Rast Goftar) எனும் இரு பத்திரிக்கைகளைத் தொடங்கி அவற்றின் ஆசிரியராகவும் பணியாற்றியவர் – தாதாபாய் நௌரோஜி
  • பெங்காலி (Bengali) என்னும் செய்திப் பத்திரிகையின் ஆசிரியராகப் பணிபுரிந்தவர் – சுரேந்திரநாத் பானர்ஜி
  • கேசரி, மராட்டா ஆகியப் பத்திரிகைகளின் ஆசிரியராகத் திகழ்ந்தவர் – பாலகங்காதர திலகர்
  • தேசிய இயக்கத்தில் மத்தியதர வகுப்பினரும் விவசாயிகளும், கைவினைஞர்களும் தெழிளாளர்களும் மிக முக்கியமான பங்கினை வகிக்க முடியுமென திலகர் உறுதியாக நம்பினார்.
  • இந்தியாவில் ஆங்கிலேயரின் ஏகாதிபத்திய ஆட்சிக்கு எதிராக நாடு தழுவிய எதிரப்புக்கு திலகர் அழைப்பு விடுத்தார்.
  • 1897ல்சுயராஜ்ஜியம் எனது பிறப்புரிமை அதை அடந்தே தீருவேன்” என முழங்கியவர் – திலகர்
  • 1897 ஜூலை 27ல் திலகர் கைது செய்யப்பட்டு இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 124A கீழ் குற்றம் சாட்டப்பட்டார்.
  • திலகர் காங்கிரசில் தீவிர தேசியவாதிகள் பிரிவைச் சேர்ந்தவராக இருந்தபோதிலும் கைது செய்யப்பட்டதை மிதவத தேசியவதிகள், தீவிர தேசியவாதிகள் ஆகிய இரு பிரிவினரும் ஒருங்கிணைந்து எதிர்த்தனர்.

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!