இந்திய விடுதலைப் போரில் முதல் உலகப் போரின் தாக்கம்

  • முதல் உலகப் போருக்கு முந்தைய ஆண்டுகளில் இந்தியாவில் அரசியல் நிலைமை ஒழுங்கற்று இருந்தது.
  • இந்திய தேசிய அரசியலில் முதல் உலகப் போருக்கு முந்தைய பல நிகழ்வுகள் தாக்கத்தை ஏற்படுத்தின.
  • 1905ல் ஜப்பான் ரஷ்யாவை வீழ்த்தியது.
  • 1908ல் இளம் துருக்கியர்களும் 1911ல் சீன தேசியவாதிகளும் மேற்கத்திய வழிமுறைகள் மற்றும் சிந்தனைகளைப் பயன்படுத்தி தத்தமது அரசுகளை அகற்றினார்கள்.
  • முதல் உலகப் போருடன் இந்த நிகழ்வுகளும் 1916 மற்றும் 1920ஆம் ஆண்டுகளில் இந்திய தேசியத்துக்கானப் பின்னணியை உருவாக்கின.
  • சண்டைகள் பல பகுதிகளில் நடந்த போதிலும் இந்தப் போரின் முக்கியக் களமாக ஐரோப்பா விளங்கியது.
  • இந்தியா, மொத்தம் 367 மில்லியன் பவுண்டுகளில் 229 மில்லியன் ரொக்கமாகவும் எஞ்சிய 138 பவுண்டு தொகையைப் போர்ச் செலவுகளைச் சமாளிக்க கடனாகவும் வழங்கியது.
  • இதைத் தவிர இந்தியா 250 மில்லியன் பிரிட்டிஷ் பவுண்டுகள் மதிப்புக்குப் போருக்கானப் பொருட்களையும் அனுப்பியது.
  • இதனால் பெருமளவில் பொருளாதார சிரமங்கள் ஏற்பட்டதால் இந்தியர்கள் அதிருப்தி அடைந்தனர்.
  • இந்திய தேசிய காங்கிரஸ் மிதவாத தேசியவாதிகள், தீவிரத் தேசியவாதிகள் என இருவேறு வகைகளில் பிரிந்த காரணத்தாலும் போரின் போது பிரிட்டிஷாரின் நலன்களுக்கு ஆதரவாக முஸ்லிம் லீக் செயல்பட்டதாலும் தேசிய அரசியல் தீவிரமற்று இருந்தது.
  • இந்தியாவில் புரட்சிகர தேசிய செயல்பாட்டுக்கு உகந்த நிலைமைகளை முதல் உலகப் போர் உருவாக்கியது.
  • முதல் உலகப் போரில் பிரிட்டனின் சிரமத்தைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்த புரட்சியாளர்கள் விரும்பினர். கதார் இயக்கம் அவற்றின் வெளிப்பாடுகளில் ஒன்றாகும்.
  • 1913ல், முஸ்லிம் லீக்கில் முகமது அலி ஜின்னா மற்றும் புதிய தலைவர்கள் சிலர் இணைந்தனர்.
  • முகமது அலி ஜின்னா முஸ்லிம்களுக்காக அதிக சீர்திருத்தங்களைக் கோரினார்.
  • 1915ல் காந்தி தென் ஆப்பிரிக்காவிலிருந்து இந்தியா திரும்பினார்.
  • 1916ல் திலகர் தலைமையில் தீவிரத் தேசியவாதிகள் காங்கிரசை கட்டுப்படுத்தினர்.
  • மேற்கத்திய இந்தியாவில் தன்னாட்சி (ஹோம் ரூல்) இயக்கத்தை திலகர் தொடங்கினார்.
  • தென் இந்தியாவில் தன்னாட்சி (ஹோம் ரூல்) இயக்கத்தை அன்னிபெசண்ட் தொடங்கினார்.
  • 1916ல் இந்துக்கள் மற்றும் முஸ்லிம்கள் இடையே கையெழுத்தான லக்னோ ஒப்பந்தம் இந்திய தேசியத்துக்கு மேலும் வலிமை சேர்த்தது.
  • இந்தப் போரின் போது தீவிர தேசியவாதிகளின் சிந்தனைகளை மேற்கத்தியப் புரட்சிகர கருத்துகள் பெருமளவில் ஆக்கிரமித்தன.
  • எனவே தேசிய இயக்கத்தை அடக்கியாள அடக்குமுறைச் சட்டங்களை இயற்றியும் பயன்படுத்தியும் ஆங்கிலேய அரசு முயன்றது.
  • அடக்குமுறைச் சட்டங்களில் மிகக் கொடுமையான சட்டமாக ரௌலட் சட்டம் அமைந்தது.
  • முதல் உலகப் போரில் துருக்கி தோற்றதும், அதன் பின் கையெழுத்தான உடன்படிக்கைசெவ்ரேஸ் உடன்படிக்கை.
  • துருக்கியின் சுல்தானை(கலிபா) நிலை தாழ்த்திக் காட்டிய உடன்படிக்கைசெவ்ரேஸ் உடன்படிக்கை.
  • செவ்ரேஸ் உடன்படிக்கையின் கடுமையான விதிமுறைகளும் துருக்கியின் சுல்தானை(கலிபா) நிலை தாழ்த்திக் காட்டியதன் விளைவாக தோன்றிய இயக்கம்கிலாபத் இயக்கம்.
  • ஆங்கிலேயர்களின் அடக்குமுறை நடவடிக்கைகள் ஜாலியன் வாலாபாக் படுகொலையில் முடிவடைந்தன.

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!