இந்தியாவில் தொழில்துறை வளர்ச்சி

அறிமுகம்

  • 19ம் நூற்றாண்டின் தொழில்துறை வளர்ச்சி முக்கியமாகப் பருத்தி, சணல் போன்ற பல துறைகளில் மட்டுப்படுத்தப்பட்டிருந்தன. இதனை மடைமாற்றப் செய்ய பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
  • 19ம் நூற்றாண்டில் மேலும் வளர்ச்சியடைந்த தொழில் நிறுவனங்கள் காகிதம், வேதிப்பொருட்கள், சிமெண்ட், உரங்கள், தோல் பதனிடுதல், எஃகு முதலியன.
  • 19ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் மைசூர் கோலார் தங்கச் சுரங்கத்தில் தங்கம் வெட்டியெடுக்கும் பணி தொடங்கப்பட்டது.
  • 19ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தோல் பதனிடும் தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டன.
  • 19ம் நூற்றாண்டில் எஃகு தொழிற்துறையானது கணிசமான வளர்ச்சியைக் கொண்ட மற்றொரு துறை ஆகும்.
  • உலகப் போர்களுக்கு இடைப்பட்ட காலப் பகுதி உற்பத்தித் தொழில்களில் பிரிட்டன் மற்றும் உலக சராசரியை விடவும் இந்தியத் தொழில்களின் வளர்ச்சி சிறப்பாக இருந்தது.

 நிலக்கரி நிறுவனம்

  • 1843ல் ராய் கஞ்ச் என்ற இடத்தில் பெங்கால் நிலக்கரி நிறுவனம் ரவீந்திரநாத் தாகூரின் தாத்தா துவாரகநாத் தாகூர் (1794-1847) என்பவரால் நிறுவப்பட்டது.
  • 1892க்குப் பிறகு நிலக்கரி உற்பத்தித் துறையின் வளர்ச்சி வேகமெடுத்து.
  • நிலக்கரி உற்பத்தித் துறை முதல் உலகப் போரின் போது உச்சத்தை எட்டியது.

இருப்புப் பாதை – ரயில்வே

  • இந்தியாவில் தொழில்துறையை நிறுவுவதில் ஒரு முக்கியமான மைல்கல் இந்தியாவின் இருப்புப் பாதை விரிவாக்கமும் புகை வண்டிப் போக்குவரத்து அதிகரித்ததுமேயாகும்.
  • 20ம் நூற்றாண்டின் முதல் பத்தாண்டில் இந்தியாவின் மிகப் பெரிய பொறியியல் தொழில் இரயில்வே ஆகும்.
  • பிரிட்டிஷாரால் நிர்வகித்து, ரயில்வே நிறுவனங்களால் நடத்தப்பட்ட இரயில்வே நிறுவனத்தில் 1911ல் 98,723 நபர்கள் பணியில் இருந்தனர்.
  • 1853ல் முதல் பயணிகள் ரயில் பம்பாய்க்கும் தானேவுக்கும் இடையே இயங்கியது.

பம்பாய் பருத்தி ஆலை

  • 1854ல் முதன் முதலில் பருத்தி ஆலையை கவஸ்ஜீ நானாபாய் தவர் (1815-73) என்ற பார்சி இனத்தைச் சேர்ந்த இந்தியரே பம்பாயில் தொடங்கினார்.
  • பம்பாய் பருத்தி ஆலை ஆனது பாம்பே ஸ்பின்னிங் அண்ட் வீவிங் கம்பெனி என்று அறியப்பட்டது.

அமெரிக்க உள்நாட்டுப் போரும் பருத்தி விவசாய வளர்ச்சியும்

  • 186165ல் நடைபெற்ற அமெரிக்க உள்நாட்டுப் போர் ஆனது பருத்தி விவசாயம் செய்தோருக்கு ஒரு வரம் ஆகும்.
  • இந்தியத் தொழில் முனைவோரால் அகமதாபாத் ஜவுளி ஆலைகள் நிறுவப்பட்டது.
  • பருத்தி ஆலைகளின் முக்கிய மையங்களாக அகமதாபாத் மற்றும் பம்பாய் ஆகியவை மாறின.
  • ஆனால் உள்நாட்டுப் போருக்குப் பின் பிரிட்டன் அமெரிக்காவிலிருந்து தொடர்ந்து பருத்தி இறக்குமதி செய்ததால் இந்தியப் பருத்தி விவசாயிகள் துயரத்திற்குள்ளாயினர்.
  • ஆனால், ஐரோப்பியர்கள் பருத்தியின் மலிவான, அபரிதமான உற்பத்தியால் இந்தியாவில் ஜவுளித் தொழிற்சாலைகளைத் துவக்கினர்.
  • இந்தியாவில் பருத்தி ஜவுளி ஆலைகள் எண்ணிக்கை 1875-76ல் 47 இருந்து 1913-14ல் 271 ஆக அதிகரித்தது.
  • 1914ல், பம்பாய் மாகாணத்திற்குள் 129 நூற்பு, நெசவு மற்றும் பிற பருத்தி ஆலைகள் இருந்தன.

சணல் உற்பத்தி

  • இந்தியாவில் 19ம் நூற்றாண்டின் பிற்பகுதி மற்றும் 20ம் நூற்றாண்டின் முற்பகுதியில் சணல் உற்பத்தி மற்றொரு தொழில் ஆகும்.
  • 1855ல் முதல் சணல் உற்பத்தி ஆலை கல்கத்தாவில் நிறுவப்பட்டது.
  • சணல் தொழில் வளர்ச்சி மிகவும் விரைவாக இருந்ததால் 1914ஆம் ஆண்டில் கல்கத்தா மாகாணத்தில் மட்டும் 64 ஆலைகள் இருந்தன.
  • இருப்பினும், பாம்பே துணி ஆலைகள் போல் அன்றி, கல்கத்தா மாகாண ஆலைகள் ஐரோப்பியர்களுக்குச் சொந்தமானவை.

தோல் பதனிடும் தொழிற்சாலை

  • 1860ல் அரசால் ஒரு தோல் பதனிடும் தொழிற்சாலை கான்பூரில் அமைக்கப்பட்டது.
  • 1905ல் கல்கத்தாவில் முதன் முதலாக இந்தியருக்குச் சொந்தமான தேசிய தோல் பதனிடும் தொழிற்சாலை ஒன்று அமைக்கப்பட்டது.

டாடா குழுமம்
 ஜே.என். டாடா (1839 – 1904)

  • ஜே.என். டாடா எனப் பிரபலமாய் அறியப்பட்ட ஜாம்ஷெட்ஜி நுஸர்வஞ்சி டாடா.
  • பரோடாவில் உள்ள நவ்சாரி என்ற இடத்தில் ஒரு பார்சி ( ஜொராஷ்ட்ரியன் ) வணிகக் குடும்பத்திலிருந்து வந்தவர் ஜே.என். டாடா.
  • இந்தியாவின் முதல் வெற்றிகரமான தொழிலதிபர் ஜாம்ஷெட்ஜி நுஸர்வஞ்சி டாடா ஆகும்.
  • இந்திய நவீனத் தொழிலகங்களின் தந்தை என ஜாம்ஷெட்ஜி நுஸர்வஞ்சி டாடா அழைக்கப்படுகிறார்.
  • 1868ல் நிறுவப்பட்ட ஜாம்ஷெட்ஜி நுஸர்வஞ்சி டாடாவுடைய வர்த்தக நிறுவனம் டாடா குழுமம் என்றானது.

குர்லா

  • பம்பாயில் உருவாக்கிய தனது நிறுவனம் ஒன்றிற்கு “சுதேசி” எனப் குர்லா, பெயரிட்டார்.

தோரப்ஜி டாடா மற்றும் ரத்தன்ஜி டாடா

  • குர்லாவின் மகன்கள் தோரப்ஜி டாடா மற்றும் ரத்தன்ஜி டாடா ஆவர்.
  • குர்லாவின் கனவுகளை தோரப்ஜி டாடா மற்றும் ரத்தன்ஜி டாடா ஆகியோர் நனவாக்கி வந்தனர்.

 காகித ஆலை

  • 1882ம் ஆண்டில் இந்திய முதலாளிகளால் லக்னோவில் முதல் காகித ஆலை – கூப்பர் பேப்பர் மில் என்ற பெயரில் அமைக்கப்பட்டது.
  • இதைத் தொடர்ந்து ஐரோப்பியர்களால் இதகர் காகித ஆலை மற்றும் பெங்கால் காகித ஆலை நிறுவப்பட்டது.

 இரும்பு மற்றும் எஃகு ஆலை
 வங்காள இரும்பு மற்றும் எஃகு ஆலை

  • 1875ல் ஐரோப்பியர்கள் குழு ஒன்று வங்காள இரும்பு நிறுவனத்தை நிறுவ முயற்சித்தது.
  • 1889ல் வங்காள இரும்பு மற்றும் எஃகு ஆலை அமைக்கப்பட்டது.

டாடா இரும்பு மற்றும் எஃகு நிறுவனம் (TISCO) 1907

  • 1907ஆம் ஆண்டில் தனது தந்தையின் கனவான டாடா இரும்பு மற்றும் எஃகு நிறுவனம் (TISCO) நிறுவனத்தை தோரப்ஜி டாடா நிறுவினார்.
  • தோரப்ஜி டாடா 2 ஆண்டுகள் அமெரிக்காவில் உள்ள அமெரிக்கன் இரும்புத் தொழிலகங்களில் நுணுக்கங்களைக் கற்றுத் தேர்ந்தார்.
  • 1907ல் பீகாரிலுள்ள சாகி நகரில் டாடா குழுமத்தால் டாடா இரும்பு மற்றும் எஃகு நிறுவனம் (TISCO) அமைக்கப்பட்டது.
  • முதன் முதலில் சுதேசி இயக்கத்தின் ஒரு நிகழ்வாக டாடா இரும்பு மற்றும் எஃகு நிறுவனம் (TISCO)அமைக்கப்பட்டது.
  • இருப்பினும், இந்தத் துறையில் உள்ள மற்ற முயற்சியாளர்களைவிட டாடா மிக உன்னத நிலையை அடைந்துள்ளது.
  • டாடா இரும்பு மற்றும் எஃகு நிறுவன உற்பத்தி 1912-13இல் 31,000 டன்னிலிருந்து 1917-18இல் 1,81,000 டன்னாக அதிகரித்துள்ளது.

 டாடா நீர் மின்சக்தி நிறுவனம் – 1910

  • தோரப்ஜி டாடாவின் மற்றொரு கனவான நீர்மின் சக்தி நிறுவனத்தை அமைப்பது என்பது அவரது வாழ்நாளுக்குள் நிறைவேறவில்லை.
  • 1910ல் மிகப்பெரும் அளவில் டாடா நீர் மின் சக்தி நிறுவனம் உதயமானது.
  • இந்திய அறிவியல் கழகம் ஒன்றை பெங்களூரில் டாடா குழுமம் நிறுவியுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!